leader eng

எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நான் பல அமைச்சுகளை வகித்துள்ளேன். பலருடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். அந்தவகையில் வெளிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயற்படக்கூடியவர்.

அவருக்கும், தனக்கும் பிரச்சினை இருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தியே. இவை அனைத்தையும் நிராகரிக்கின்றேன். எமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைந்து குழுவாகவே நாம் எதிர்கொண்டுவருகின்றோம். மாற்றமும் ஏற்பட்டுள்ளது. “ என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி