ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இயற்கை உரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (நவம்பர் 08) விவசாயிகள் பலர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உழவு இயந்திரங்களில் வந்த விவசாயிகள், தமது பயிர்களுக்கு இரசாயன உரங்களை விரைவில் வழங்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உரப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட செயலாளரிடம் கையளித்ததாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

​பெரும் போகத்தில் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ராஜபக்ச அரசாங்கம் விதித்துள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தற்போது நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவத்தினரால் இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு கூற வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பு தெரிவித்திரு்ந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதை தாவர தனிமைப்படுத்தல் சேவை உறுதிப்படுத்தியதை அடுத்து அரசாங்கம் சர்வதேச நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Protest 1Protest 2Protest 3

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி