மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலக்கப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து அரசாங்கத்தின் பக்கம் கட்சித் தாவிய டயானா கமகே என்ற 'கஞ்சா டயானா' வெறுமனே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் மாத்திரமே எனவும் அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்பது மாத்திரமன்றி போலி தேசிய அடையாள அட்டை, போலிப் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை முன்வைத்தே இலங்கையில் கடவுச் சீட்டு பெற்றுள்ளதாகவும் இவர் மூன்று வெவ்வேறு பெயர்களில் நடமாடி உள்ளதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்ற தகவலை முதல் முறையாக 2020, ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்த செய்தியை எழுதும் கட்டுரையாளர் வெளியிட்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

பொதுச்சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் நோய் கட்டுப்பாடு தொடர்பான தீர்மானங்களை  எடுப்பதில் சுகாதார நிபுணர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னணி நிபுணர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிமுக இரு இடங்களிலும் திமுக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 75 இடங்களிலும் திமுக 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் இன்று (02) மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்க ஆயத்தமான நிலையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே எம் ஏ ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் வை.கே ரஹ்மான், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான், கலில் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் மான்குட்டி ஜுனைதீன் ஆகியோருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழில் 12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தனது கொடூரமான சட்டங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கடும் சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள ஆசிரி மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி