ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து அரசாங்கத்தின் பக்கம் கட்சித் தாவிய டயானா கமகே என்ற 'கஞ்சா டயானா' வெறுமனே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் மாத்திரமே எனவும் அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்பது மாத்திரமன்றி போலி தேசிய அடையாள அட்டை, போலிப் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை முன்வைத்தே இலங்கையில் கடவுச் சீட்டு பெற்றுள்ளதாகவும் இவர் மூன்று வெவ்வேறு பெயர்களில் நடமாடி உள்ளதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்ற தகவலை முதல் முறையாக 2020, ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்த செய்தியை எழுதும் கட்டுரையாளர் வெளியிட்டார்.

பிரபல சமூக அரசியல் செயற்பாட்டாளர் ஓசல ஹேரத் முன்வைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் பாராளுன்ற உறுப்பினர் டயானா கமகே குறித்து குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஓசல ஹேரத் தனது முறைப்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருந்து கொண்டு அதனை மறைத்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் உத்தியோகபூர்வ மற்றும் சாதாரண கடவுச் சீட்டுகளைப் பெற்று இலங்கையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி வரும் குற்ற விசாரணை திணைக்களம் அது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இலக்கம் B48037/01/2021 என்ற பீ அறிக்கை மூலம் ஆரம்பக்கட்ட தகவல்களை சமர்ப்பித்து உள்ளனர்.

நயனா சமன்மலி, டயானா நதாஷா, டயானா கமகே ...

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு பெயர்களில் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அவரது முதல் பெயர் டயானா சமன்மலி என்பதாகும். பின் 'டயானா நதாஷா கேகனதுர' என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் 'டயானா கமகே' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் செய்துள்ளமைக்கு காரணம் தன்னை ஒரு பிரித்தானிய பிரஜை என்பதை மறைத்து (போலி) இலங்கை பிரஜையாக காட்டிக் கொள்ளவே ஆகும்.

முதலில் போலி பிறப்புச் சான்றிதழ் ...

இந்த செயற்பாடுகளுக்கு முதலில் அவர் போலி பிறப்புச் சான்றிதழ் ஒன்றை தயாரித்துக் கொண்டுள்ளார். இலக்கம் 6553 என்ற பிறப்புச் சான்றிதழ் 'தென் கொழும்பு' என்று கூறப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் கொழும்பு மாவட்டத்தில் அப்பாடி ஒரு நிர்வாக வலயம் இல்லை எனவும் அதனால் இது போலி பிறப்புச் சான்றிதழ் எனவும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் இரகசிய பொலிஸாரிடம் உறுதி செய்துள்ளார்.

போலி பிறப்புச் சான்றிதழ் ஒன்று போலி தேசிய அடையாள அட்டை ஒன்று, போலி கடவுச் சீட்டுகள் இரண்டு ...

டயானா கமகே போலி பிறப்புச் சான்றிதழை முன்வைத்து போலி தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொண்டுள்ளார். 658534399 V என்ற இலக்கம் கொண்ட போலி தேசிய அடையாள அட்டையை 2004ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதியே பெற்றுக் கொண்டுள்ளார். அதில் வதியும் இடமாக இலக்கம் 7/9 ஶ்ரீ நக்கலா குறுக்கு வீதி, எரிக்கமுல்ல, கெசெல்வத்த, பாணந்துறை முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரேனும் இலங்கை குடியுரிமை கொண்ட பிரஜை ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றால் உடனே அவரது இலங்கை குடியுரிமை பறிபோகும். அதன் பின் இரட்டை பிரஜா உரிமை பெற்றிருந்தால் அதனை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் ஆட்பதிவு திணைக்களத்தில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்போது பழைய தேசிய அடையாள அட்டை இரத்து செய்யப்பட்டு புதிய இலக்கத்துடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும். ஆனால் 'கஞ்சா டயானா' இதுவரை இரட்டை பிரஜை உரிமை பெற்றதாக ஆட்பதிவு திணைக்களத்தில் புதிதாக பதிவு செய்து புதிய தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவில்லை. இன்னும் பழைய தேசிய அடையாள அட்டையே வைத்துள்ளார். அதனால் அவர் தற்போது வைத்திருக்கும் தேசிய அடையாள அட்டை இரத்து செய்யப்பட்ட ஒன்றாகும். அது போலி தேசிய அடையாள அட்டை என்றே  கருதப்படும்.

அது மாத்திரமன்றி டயானா கமகே மேற்கூறிய போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தேசிய அடையாள என்பவற்றை பயன்படுத்தி இலங்கையில் சாதாரண கடவுச் சீட்டு மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டு என்பவற்றை பெற்றுக் கொண்டுள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரன்மினிதென்ன சினிமா கிராமத்தின் தலைவர் என தன்னை அறிமுகப் படுத்தியே உத்தியோகபூர்வ கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.  

பிரித்தானிய பிரஜை ஒருவர் தற்போது இலங்கையில் சட்ட விரோதமாக தங்கி உள்ளார்..

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக பிரித்தானிய கடவுச் சீட்டும் தன்வசம் வைத்துள்ளார்.  அவர் வைத்துள்ள பிரித்தானிய கடவுச் சீட்டின் இலக்கம் 521398876  என்பதாகும். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த டயானா கமகே 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதியில் இருந்து அடிக்கடி இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுற்றுலா விசா மற்றும் வதிவிட விசாவிற்கு விண்ணப்பம் சமர்பித்துள்ளார். இறுதியாக 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி தொடக்கம் 2015ம் ஆண்டு ஜுலை 16ம் திகதி வரையான காலத்திற்கு வதிவிட விசா பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர் விசா பெற்றுக் கொள்ளவில்லை. டயானா கமகேவிற்கு இலங்கையில் சட்ட ரீதியான இரட்டை குடியுரிமை இல்லை என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டி உள்ளோம். அப்படி என்றால் கஞ்சா டயானா 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் திகதி தொடக்கம் இலங்கையில் குடியுரிமை இன்றி விசா இன்றி சட்ட விரோதமாக தங்கி உள்ளார்.

குற்றவியல் சட்டம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் பாரிய குற்றம்...

இதன்படி கஞ்சா டயானா குற்றவியல் சட்டக் கோவையின் 175வது சரத்து மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(1) (அ) மற்றும் (இ) சத்துக்கள் படி பாரிய குற்றம் புரிந்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

டயானா கமனேவின் பிரித்தானிய குடியுரிமை குறித்த தகவல்களை பிரித்தானிய தூதரகத்தில் இருந்து பெற்று சமர்பிக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கால அவகாசம் கோரியுள்ளனர்.

கஞ்சா டயானாவிற்கு பொது மக்கள் பணத்தில் சொகுசு அனுபவிக்க இடமளிக்கக் கூடாது...

இவ்வாறு மோசடிக்கார பெண் முழு நாட்டையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றி நாட்டில் கஞ்சா செய்கை சட்ட ரீதியானதாக மாற்றப்பட வேண்டும் எனவும் நள்ளிரவு 1 மணி வரை பார்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்றில் கருத்து வெளியிட்டு நாட்டு மக்களை ஒழுக்கமற்ற திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சா டயானாவும் நிச்சயமாக கீத்தா குமாரசிங்க சென்ற வழியில் செல்வதுடன் சிறைக்குச் செல்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அந்த காலத்திற்குள் அவர் பாராளுமன்றில் பொது மக்கள் பணத்தை பயன்படுத்தி சொகுசு அனுபவிக்க இடமளிக்கக் கூடாது. பொது மக்களின் நலன் கருதாமல் மக்கள் தவறான வழியில் அழைத்துச் செல்ல நினைக்கும் டயானா கமகே போன்ற எறுமை மாடுகளை பாராளுமன்றுக்கு தேசிய பட்டியல் மூலம் அனுப்பி வைத்த சஜித் பிரேமதாஸவும் பாரிய குற்றம் புரிந்துள்ளார்.  கஞ்சா டயானா பொது மக்கள் பணத்தில் சொகுசு அனுபவிப்பதற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்.

ஆதாரம்: newvoicenewstv.com

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி