சீனாவின் டாலிக் பகுதியில், இன்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக்காக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த  திட்டத்தை கைவிட்டு பொதுமக்களின் பொது வரிப் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ற் கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவும், கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர்.(திருமதி).R. ஶ்ரீரிதரின் வழிகாட்டலிலும், கப்பல்துறை தள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் .R. நிரஞ்சனின் மேற்பார்வையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது 50 படுக்கைகளுடன் கூடிய ஒருங்கினைந்த மருத்துவ முறையில் ( சித்த, ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை) COVID-19 நோயாளர்களை சிகிச்சை மையம் வெகு விரைவில் கப்பல்துறை சித்த ஆயுர்வேத தள வைத்தியசாலையில் தொடங்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தை விட 4 மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்ட்டிகாவில் இருந்து கடலில் பிரிந்து சென்றுள்ளது. பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையின் பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி