கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவும், கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர்.(திருமதி).R. ஶ்ரீரிதரின் வழிகாட்டலிலும், கப்பல்துறை தள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் .R. நிரஞ்சனின் மேற்பார்வையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது 50 படுக்கைகளுடன் கூடிய ஒருங்கினைந்த மருத்துவ முறையில் ( சித்த, ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை) COVID-19 நோயாளர்களை சிகிச்சை மையம் வெகு விரைவில் கப்பல்துறை சித்த ஆயுர்வேத தள வைத்தியசாலையில் தொடங்கப்படவுள்ளது.

அதற்குரிய அனைத்து ஆயத்தங்களும் நிறைவடைந்து உள்ளது.

இன் சிகிச்சை மையத்தில் நோயாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக சித்த, ஆயுர்வேத மருந்தோ அல்லது அலோபதி மருந்தையோ மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பெற்றுகொள்ள முடியும்.

கிழக்கு மக்களுக்காக சுதேச மருத்துவ திணைக்களம் மிகபெரிய சேவை ஒன்றினை இதன் மூலம் செய்யவுள்ளது.

திருகோணமலையில் மட்டும் இல்லாமல் அடுத்ததாக மட்டக்களப்பிலும் புதுக்குடியிருப்பு தள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 100 படுக்கைகளை கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை முறையினை ஆரம்பிப்பதற்குறிய ஆயத்த வேலைகள் நடைபெறுகின்றன.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி