கொவிட்டை விட பெருந்தொற்றாக ராஜபக்ச அரசு மாறியுள்ளது, முதலில் இந்த அரசைக் கட்டுப்படுத்தினால் தான் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது.  இந்நிலையில், கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவர்கள் உள்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

ஈரானில் ஜூன் 18ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டின் நீதித்துறை முன்னாள் தலைவர் இப்ராஹீம் ரைசி வெற்றிபெறுள்ளார். இதன் மூலம் ஈரானின் 13ஆவது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

கப்பல் தீப்பற்றியமை மற்றும் எரிபொருற்களின் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பாலத்துறை லுனுபொக்குன பிரதேச மீனவர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு செய்ததுடன், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவை கைது செய்ய முயன்ற போது மீனவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் பொலிஸாரின் முயற்சி கைவிடப்பட்டது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள கொவாய் மாவட்டத்தில் மாடுகளை திருடியதாகக் கூறி மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல்நாசர் ஹெமட்டி, ஈரான் புரட்சிப் பாதுகாப்பு படை முன்னாள் தலைவர் மோசன் ரெசாய் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர்.

பயணக் கட்டுப்பாட்டை சில நாட்களுக்கு நீக்குவதால் எப்ரல் மாதத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலை உருவாகக் கூடுமென இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் எதிலும் தாம் பங்கேற்க போவதில்லை என்றும், அனைத்து பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்தும் விடைபெறுவதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ஏராவூரில் சில நபர்களை முழந்தாளிடச் செய்து இரு கைகளையும் உயர்த்திக் கொண்டிருக்குமாறு  அச்சுறுத்திய காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகளில் உலா வருகின்றன. மேற்படி நபர்கள் பயணக் கட்டுப்பாடை மீறியதானல் இராணுவம் இவ்வாறு முழந்தாளிட வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்களில் இராணுவத்தினர் தடிகளை கையில் வைத்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி