அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் விடுதலை செய்யப்பட இருந்தவர்களாவர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னேரிய தேசிய பூங்காவில் வன பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியாக  இராணுவ மேஜர் ஜெனரலுக்கு கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (திங்கட்கிழமை) காலையில் இருந்து மாலை 9 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

சிரியா, ஈராக் நாடுகளின் எல்லை பகுதிகளில் அமெரிக்க ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளது.ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசியல் மட்டத்தில் அடுத்து வாரங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப் போவதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்புக்குள் சீன நிறுவனம் அமைத்துள்ள கடலட்டை பண்ணை, எவ்வித அனுமதியும் பெறப்படாமலேயே அமைக்கப்பட்டுள்ளதென, பூநகரி பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது.இன்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி