ஏராவூரில் சில நபர்களை முழந்தாளிடச் செய்து இரு கைகளையும் உயர்த்திக் கொண்டிருக்குமாறு  அச்சுறுத்திய காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகளில் உலா வருகின்றன. மேற்படி நபர்கள் பயணக் கட்டுப்பாடை மீறியதானல் இராணுவம் இவ்வாறு முழந்தாளிட வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்களில் இராணுவத்தினர் தடிகளை கையில் வைத்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

கைது செய்யப்படும் நபர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை இராணுவத்திற்கும் பொலிஸுக்கும் யார் கொடுத்தது என்ற சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எத்தகைய குற்றம் சம்பந்தமாகவும் கைது செய்யப்படும் நபர்களை தண்டிக்கும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், அதையும் தாண்டி நபர்களை கைது செய்யும் போதும், தடுத்து வைத்துள்ள நிலையிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் செய்யும் சித்திரவதைகள் குறித்து அடிக்கடி செய்திகள் வருகின்றன.

இதற்கிடையே, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதாக இராணுவம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி