தலைநகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டிடங்களை  வெளிநாட்டினருக்கு ஒப்படைக்கும் தற்பேதைய அரசாங்கத்தை எதிர்த்து பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக நாட்டின் முன்னணி வங்கி தொழிலாளர் சங்கங்களில் ஒன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் 30 Sinopharm தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை பகுதியில், இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009 இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால் தான், அது கடனை அடைக்க கடன் வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் மென்டிஸும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தாலும் அவர்களது பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவில் இதுவரை 20 பேர் நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திநாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. அவரது நியமனத்திற்கு பிறகு சீர்திருத்த நடவடிக்கைகளாக பள்ளிகளில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தது, மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது உள்ளிட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு அரசாங்க லக் சதொச கிளைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகிக்குமாறு வர்த்தக அமைச்சு விடுத்த வேண்டுகோளை இறக்குமதியாளர்கள் நிராகரித்துள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி