பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

நிதி இராஜாங்க அமைச்சராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியின் கீழ் கொழும்பு துறைமுக நகரம், முதலீட்டு சபை உட்பட தற்போது நிதி அமைச்சின் கீழ் நிறுவனங்கள் பல உள்ளடக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தனக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை வழங்குமாறு முன்னளாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகால அரசாங்கம் பதவியேற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதான அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படும் என அதிகளவில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி