பொலிஸ் நிலையத்தில் சட்டத்தணி ஒருவரை தாக்க முயன்ற மற்றும் அவரது தொழில்முறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நண்பர் என நம்பப்படும் நபர் ஒருவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்று பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சட்டத்தரணி மொஹமட் நஜீம் மொஹமட் பஸீர் ஜூலை 4ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் சார்பாக தொழில்முறை கடமைக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இரவு 9 மணியளவில், குறித்த சட்டத்தரணி தனது பணிகளை மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில், அங்கு வந்த மொஹமட் லாபீர் உசைன் மொஹமட் இம்தியாஸ் என்ற நபர், உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.ஏ சில்வா மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக ஜயகொடி  முன்னிலையில் சட்டத்தரணியை அவமானப்படுத்தி, அச்சுறுத்தியதோடு அவரைத் தாக்க முயற்சித்துள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் அச்சுறுத்தியதோடு, தாக்குதல் நடத்த குறித்த நபர் முயற்சித்துள்ள நிலையில், எந்தவொரு அதிகாரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மன்றத்தின் நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அந்த சட்டத்தரணி அன்றைய தினமே (04 ஜுலை) இதுத் தொடர்பில் 155/58 சி (1) இன் கீழ் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.”

முறைப்பாட்டின் பின்னர், குறித்த நபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தான் நன்கு அறிந்திருப்பதாகக் கூறி மீண்டும் சட்டத்தரணியை அச்சுறுத்தியதாக சட்டத்தரணி சேனக பெரேரா குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Senaka perera 2

”முறைப்பாட்டின் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த குறித்த நபர், 

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை தான் நன்கு அறிவதாகவும், ஆகவே தனக்கு சரியான பாதுகாப்பு காணப்படுவதாகவும் அவர் மேலும் அச்சுறுத்தியுள்ளார்.”

இந்த விடயமானது, பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் தனது கடமைகளை மேற்கொள்வது தொடர்பில் , மே 18, 2012 திகதியிடப்பட்ட உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் எண் 1758/31 இன் விதிமுறைகளை முற்றிலுமாக மீறுவதாக அமைந்துள்ளதாக, சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"இவ்வாறு, ஒரு பொலிஸ் நிலையத்தில் ஒழுக்கயீனமான நடத்தை மற்றும் அச்சுறுத்தலுடன் ஒரு சட்டத்தரணியின் தொழில்முறை நடவடிக்கைகளில் தலையிட்டு ஒரு சட்டத்தரணியை தாக்கும் முயற்சியின்போது, நடவடிக்கை எடுப்பதற்கான இயலுமை இருந்தபோதிலும், பொலிஸ் நிலைய அதிகாரிகள் தங்கள் சட்டப் பொறுப்பை புறக்கணித்துள்ளனர்”

குறித்த சட்டத்தரணியின் தொழில்முறை நடவடிக்கைகளை தடுக்கவும், அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும் பொலிஸ் அதிகாரிகள் ஊக்குவித்துள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

"சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என்பது மேலும் தெளிவாகிறது."

எனவே, இந்த சம்பவம் குறித்து உடனடியாக முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு மக்கள் சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி