அரசாங்கத்திற்கு எதிராக தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளையும், மக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதற்கு பொலிஸ் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. தொற்று நோய் காரணமாக அமுல் படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ் ஜனநாயக பயன்பாட்டிலிருந்து மக்களை அகற்றும் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று நோய் பரவத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களாகிய போதிலும் இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தர திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் கேட்டு கடந்த வருடம் பூராவும் மக்கள் மேற்கொண்டு வந்த போராட்டங்களில் சுகாதார சேவை உட்பட ஏனைய தொழில் துறைகளைச் சார்ந்தவர்களும் இப்போது இணைந்துள்ளனர். தொற்று நோய் காரணமாக நீண்டகாலம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருந்தாலும், பணியாளர்கள் தாங்க முடியாத கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிவாரணங்கள் கிடைக்காமை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் சாமானிய மக்கள் துன்பப்படுகின்றனர். தவிரவும், அத்தியாவசிய சேவைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்துச் சேவையோ, பணியாற்றும் இடங்களில் சுகாதாரப் பாதுகாப்போ உறுதி செய்யப்படவில்லை.

சுகாதாரப் பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர்கள் தனிமைப்படுத்தல் முறையை பொருட்படுத்தாமல் பாதையில் செல்லும் வாகனங்களில் நெருங்கிக் கொண்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புகையிரத பயணத்திலும் வித்தியாசமில்லை. தற்போது சுகாதாரப் பணியாளர்கள் தமது தேவைகள் சம்பந்தமாக விடுக்கப்பட்ட கோரிக்கை கவனிக்காமல் விடப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய தொழிற்துறைகளை சேர்ந்தவர்களும் தொற்று நோய்க்கு மத்தியிலாவது தமது சேவைகளில் தரமான மாற்றமொன்றுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும் காண முடியும்.

விசேடமாக வெளிநாட்டு செலவானி குறைந்து வரும் சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக இரசாயண பசளை இறக்குமதியை நிறுத்திவிட்டு சேதனப் பசளைக்கு திரும்பும் திட்டத்தினால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, கொழும்பு துறைமுக நகரம், கப்பல் மூழ்கியமை ஆகியவற்றால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலும் உள்ளனர்.

இந்த நிலையில், தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை எனக் கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய பொலிஸ் தயாராகி வருகிறது. எதிர்ப்புகள் பரவலாகும் போது அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி