அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் உட்பட 16 பேரும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று 16.07.2021 (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் குறித்து புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.

பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு மரம் வளர்ப்பது என்பது ஆசையாக இருந்தாலும், அதற்கு தேவையான இடமில்லாததால் அந்த ஆசையானது அவர்களுக்கு ஒரு கனவாகவே சென்றுவிடுகிறது. அதுபோன்ற மக்களுக்கு போன்சாய் மர வளர்ப்பு முறை ஏற்ற வழியாக இருக்கிறது. போன்சாய் என்ற குறுமர வளர்ப்பின் மூலமாக நூறு வருடங்கள் வாழும் மரத்தைக்கூட ஒரு அடி நீளம் கொண்ட தொட்டியில் வளர்த்து விடலாம்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைத்துள்ளது.

மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு சிறுகதையின் அடிப்படையில் தன்னை கைது செய்து தடுத்து வைத்தமை அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, விருது பெற்ற எழுத்தாளர் தாக்கல் செய்த மனு ஒக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டையும், அதன் வளங்களையும், தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் விடாமல் நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி குறித்த அதன் கொள்கை மற்றும் செயல் திட்டம் குறித்து அரசாங்கம் பொறுப்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஜேவிபி இன்று வலியுறுத்தியுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி