இலங்கை நாட்டையும், அதன் வளங்களையும், தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் விடாமல் நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி குறித்த அதன் கொள்கை மற்றும் செயல் திட்டம் குறித்து அரசாங்கம் பொறுப்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஜேவிபி இன்று வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இந்த நாட்டின் குடிமக்கள், வணிக சமூகம் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரிமை உண்டு என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

முக்கியமான அரச வளங்களை டொலர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த தற்காலிக தீர்வுகள் இந்த நெருக்கடியை தீர்க்காது என்றும் அவர் கூறியுள்ளார். நாடு கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இது அத்தியாவசிய இறக்குமதிகள் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்நிய செலாவணியைக் கண்டுபிடிப்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் அந்நிய செலாவணி நெருக்கடி இல்லை என்று ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். எனினும் அந்நிய செலாவணி நெருக்கடியால் எரிபொருள் கொள்வனவு, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவது என்பன ஆபத்தில் உள்ளன என்று ஹதுன்னெத்தி கூறினார்.

இந்த சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதன் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை அரசாங்கம் தெளிவாக விளக்க வேண்டும்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய நிதியமைச்சர் அடுத்த சில மாதங்களுக்குள் இந்த நெருக்கடியை தீர்க்கப்போகிறார்.

திருகோணமலை எண்ணெய் பண்ணை, மின் உற்பத்தி, எரிபொருள் வழங்கல் போன்ற முக்கியமான அரச வளங்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.

செலம்பிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் கொழும்பில் மதிப்புமிக்க நிலங்களையும் சொத்துக்களையும் விற்பனை செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி