பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு மரம் வளர்ப்பது என்பது ஆசையாக இருந்தாலும், அதற்கு தேவையான இடமில்லாததால் அந்த ஆசையானது அவர்களுக்கு ஒரு கனவாகவே சென்றுவிடுகிறது. அதுபோன்ற மக்களுக்கு போன்சாய் மர வளர்ப்பு முறை ஏற்ற வழியாக இருக்கிறது. போன்சாய் என்ற குறுமர வளர்ப்பின் மூலமாக நூறு வருடங்கள் வாழும் மரத்தைக்கூட ஒரு அடி நீளம் கொண்ட தொட்டியில் வளர்த்து விடலாம்.

இந்த முறையை முதலில் சீனர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றாலும் தற்போது அது ஜப்பானியர்களால் அதிகமாக பின்பற்றப் படுகிறது. இந்த முறையில் மரங்களினுடைய வேர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, அது வளரும் உயரத்தையும் நம்மால் குறைக்க முடியும். போன்சாய் மர வளர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலையாக இருக்கிறது. அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், அந்த மரத்துடன் மனம்விட்டு பேசும் அளவிற்கு செல்வதால், அவர்களின் மன அழுத்தமும் குறைந்துபோகிறது. இந்த குறுமர வளர்ப்பு பற்றியும் இதில் இருக்கும் சில முக்கியமான நுணுக்கங்கள் பற்றியும் பார்ப்போம் வாருங்கள்.

வளர்ப்பு முறைகள்: நர்சரியில் இருந்து வாங்கி வந்த மரச் செடியை, ஒரு அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட தொட்டியில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு உரம் என நிரப்பிட்டு அதில் நட்டுவிட வேண்டும். இப்படி செய்வதால் வேரானது அதிக ஆழத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அந்த செடியானது போன்சாய் வளர்ப்பிற்கு ஏற்றதாக மாறுகிறது. இந்த முறையில் மரத்தின் கிளைகளை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறும் வடிவமைத்துக் கொள்ளலாம்.

மிருதுவான காப்பர் கம்பிகளை மரத்தின் கிளைகளில் சுற்றிவிட்டு, பின்னர் அதனை நமக்கு பிடித்த வடிவங்களில் வளைத்துக் கொள்ள வேண்டும். இதனை கிளைகள் சற்று பலமிக்கதாக வளர்ந்த பின்னர் செய்வது நல்லது. அடுத்ததாக தொட்டி மாற்றுவது. ஒரு வருடம் சென்ற பின்னர் புதிய தொட்டியை மாற்றவிட வேண்டும். முதலில் பெரிய தொட்டியில் ஆரம்பித்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தொட்டியின் அளவை குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

புதிய தொட்டி மாற்றப்படும்போது வேர்களில் இருக்கும் மண்ணை நன்றாக உதிர்த்து விட்டு மக்கிய உரம், மண் போன்றவற்றை நிரப்பி அதில் மரத்தை ஊண்ற வேண்டும். மரத்தை புதிய தொட்டிக்கு மாற்றிய பின்னர் இரு மாதங்கள் கழித்து மரத்தின் வேர்களை வெட்டி விடுவது அவசியாமான ஒன்றாக இருக்கிறது. இதற்கான உபகரணங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. மரத்தின் பக்கவாட்டு வேர்களை சிறிது வெட்டினாலே பொதுமானது.

வேர்கள் வெட்டிய மரத்தை இரண்டு மாதங்களாவது கடுமையான வெயிலில் இருந்து பாதுகாப்பாக வையுங்கள். மரத்திற்கு தண்ணீரை ஊற்றாமல் லேசாக தெளிப்பது நல்லது. மற்றும் அதிகமான உரமிடுதலையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக உரமிடுதல் மரத்தின் வளர்ச்சியை தூண்டிவிடும் என்பதால் அதை தவிர்த்து விடவும். இந்த முறைகளை தவறாமல் பின்பற்றி வந்தால் எந்த மாதிரியான மரங்களையும் சிறு தொட்டியிலேயே நாம் வளர்த்து விடலாம்.

எந்த வகையான மரங்களையும் போன்சாய் முறையில் வளர்க்க முடியும் என்றாலும், குள்ளமாக வளர்வதற்கு சிறிய இலைகளைக் கொண்ட மரங்களே மரங்களே இதற்க்கு பொருத்தமானதாக கருதப்படுகிறது. உரிய முறையில் சரியாக பராமரித்து வளர்க்கப்பட்டால் இவ்வகை மரங்கள் மற்ற மரங்களின் ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். ஒருவேளை சரியாக பராமரிக்கவில்லை என்றால் இவை நீண்ட நாட்கள் இருக்காது. அதனால் இந்த முறையில் மரத்தை வளர்க்க விரும்புவோர் அதை சரியாக பராமரிக்கவும் தயாராக இருக்க வேண்டும். TAGSBonsai maram valarppuBonsai tree growth Tamilபோன்சாய் மரம் வளர்ப்பு

Image result for Artificial Bonsai Trees

Image result for Artificial Bonsai Trees

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி