மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கம் வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கும் முன்பு 2018ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்தபோது கீழே விழுந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது.

சுரேகா சிக்ரி, 1978ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான 'கிசா குர்சி கா' என்ற படத்தில் அறிமுகமானார். அத்துடன், ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிளும், தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', மற்றும் 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ' என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

2008ம் ஆண்டில் 'பாலிகா வாது' என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றார். இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989ல் சங்கீத நாடக அகாடமி விருது வென்றார். மேலும், 64 வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதிற்கு சுரேகா சிக்ரி பரிந்துரைக்கப்பட்டார்.

சுரேகா சிக்ரி மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி