நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் கையளித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காணப்படுகின்றமை, சர்வதேச கடல் போக்குவரத்து இணையத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் அதிபர் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையை காட்டாத போதிலும் பிற துறைகளில் உழைக்கும மக்களின் ஆதரவை தெரிவிப்பதற்காக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு ஜனாதிபதிகளினதும், ஒரு பிரதமரினதும் ஆலோசகராக இருந்தவரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான ஆர். பாஸ்கரலிங்கம் தனது சொத்துக்களை இரகசியமாக மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைவு வெளியிட்ட ‘பண்டோரா ஆவணங்கள்” வாயிலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக் குறைந்தது நான்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகும் நிலையில்,  பெண்களுக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினரால் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக, தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில்,  சித்திரவதை செய்யப்பட்டமைத் தொடர்பில் தென்னிலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து அதனை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் அங்கு விஜயம் செய்யவுள்ள தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் (Vidura Wickramanayaka) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஒன்றுகூடியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் இன்றைய தினம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி