இரண்டு ஜனாதிபதிகளினதும், ஒரு பிரதமரினதும் ஆலோசகராக இருந்தவரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான ஆர். பாஸ்கரலிங்கம் தனது சொத்துக்களை இரகசியமாக மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைவு வெளியிட்ட ‘பண்டோரா ஆவணங்கள்” வாயிலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கரைகடந்த நிறுவனங்களில் சொத்துக்களை இரகசியாக பதுக்கியிருந்த உலக ஜாம்பாவான்கள் மற்றும் செல்வந்தர்களின் சொத்துக்கள் தொடர்பில் இரகசிய பண்டோரா ஆவணங்கள் ஊடாக ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான டொலர்களை ஆர். பாஸ்கரலிங்கம் பதுக்கி வைத்துள்ளதாக புதிய பண்டோரா ஆவணங்களில் அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆலோசகராக 1989லிருந்து 1993 வரையிலும், பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான டிங்கிரி பண்டா விஜேதுங்கவின் ஆலோசகராக 1993லிருந்து 1994 வரையிலும் செயற்பட்டிருப்பதுடன், திறைசேரியின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளதாக பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார முகாமைத்துவக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். என்றாலும் அந்நாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன 2018ல் இந்தக் குழுவை கலைத்துவிட்டார்.

பாஸ்கரலிங்கம் கடந்த 2012ல் பிரத்தானிய வர்ஜின் தீவுகளில் ஒரு அறக்கட்டளையை அமைத்திருப்பதாகவும், அதன் தாபனப்படுத்தப்பட்ட ஆவணங்களின்படி, அவரது தொழிலாக ‘ஓய்வு பெற்றவர்” என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பண்டோரா ஆவணம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரும் அவரது குடும்பமும் அதன் பயனாளிகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு, பிரித்தானியாவில் வர்ஜின் நிறுவனமொன்றும்,; கொழும்பு கிழக்கு தனியார் தொழில் பாடசலையான Horizon College of Business and Technology ன் பங்குகளை கொண்ட சிங்கப்பூர் நிறுவனமொன்றும் உள்ளடங்குவதாகவும் பண்டோர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைவு (ICIJ) ‘விற்பதற்கான இரகசியத்தன்மை” என்ற தலைப்பில,; இந்த கரைகடந்த தொழில்கள் சம்பந்தமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்த கையோடு இந்த அறக்கட்டளையை பாஸ்கரலிங்கம் மூடிவிட்டாhக பண்டோரா ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரகசிய மின்னஞ்சல் செய்திகளின்படி எவ்வித திட்டமுமின்றி பாஸ்கரலிங்கம் இதை கைவிட்டுள்ளதுடன், பின்னர், அவரது மகனுக்காகவும், மருமகனுக்காகவும் புதிய அறக்கட்டளையொன்றை அமைத்துள்ளதாகவும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி