1200 x 80 DMirror

 
 

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும்  இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.


புதிய அமைச்சரவை ஒரு கண் துடைப்பாகும் , தலைவலிக்கு மருந்து எடுக்க வேண்டுமே தவிர தலைவலிக்கு தலையணையை மாற்றி சரிவராது. இது எமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடவடிக்கை ஆகாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

 தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் மக்கள் முன்னெடுத்துள்ள அமைதிப்போராட்டம் 11 ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கிறது.


அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் போராட்டத்தை களியாட்டத்திற்கு ஒப்பிட்ட ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சி குறித்து பிரபல ஊடக நிறுவனமான தெரண ஊடக வலையமைப்பு மௌனம் கலைத்துள்ளது.

 பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறை திருத்தி நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்களே தவிர நாட்டை தோல்வியடைய செய்வதற்கு அல்ல.

இறுதிக்கட்டப்போரில், இராணுவத்தினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளுக்காக நீதிவேண்டி வடக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு எதிராக பயணத்தடை கோரி முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி