கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் போராட்டத்தை களியாட்டத்திற்கு ஒப்பிட்ட ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சி குறித்து பிரபல ஊடக நிறுவனமான தெரண ஊடக வலையமைப்பு மௌனம் கலைத்துள்ளது.


நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட குறித்த நிகழ்ச்சிக்காக சமூக ஊடகப் பயனாளர்கள் பலர் தொலைக்காட்சி சேனலை விமர்சித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ ஆதரிப்பவர்கள் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தமைக்காகவும், கார்டினாலின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும் தொகுப்பாளருக்கு தெரண ஊடக வலையமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

 

அறிக்கை ஒன்றை வெளியிட்ட தெரண ஊடக வலையமைப்பு, ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான மஹியாஷ் ஜானி, நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரண ஊடக வலையமைப்பு, "நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட 'தொகுப்பாளரினால், வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தொகுப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே அவை தெரண ஊடக வலையமைப்பையோ அதன் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை." என தெரிவித்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி