இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறை திருத்தி நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்களே தவிர நாட்டை தோல்வியடைய செய்வதற்கு அல்ல.

ஆகவே ஜனநாயக போராட்டத்தை வன்முறை பாதையில் திசைத்திருப்பும் சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமன நிகழ்வில் விஷேட உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தீர்மானங்களிலும் தவறு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.சர்வதேச நாணய நிதியத்தை ஆரம்பத்தில் நாடியிருக்க வேண்டும், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி சென்றால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை மீள பெற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை.அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன.நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவேயன்றி அதிகார தேவைக்காக அல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுவேன்.

சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றிற்கு உண்டு.அரசியமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

அதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றிற்கு வழங்க எந்நிலையிலும் தயாராகவுள்ளேன். நாட்டின் அதியுயர் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை செய்து இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிப்பதாக நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான அதேபோன்று சவாலான பொருளாதார மற்றும் அரசியல்,சமூக ரீதியில் நாடு தீர்மானமிக்க தருணத்தை எதிர்க்கொண்டுள்ளது.

சிரேஷ்டத்துவத்துவம் குறித்து அவதானம் செலுத்தாமல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளேன்.

அமைச்சு பதவி என்பது வரப்பிரசாதம் அல்ல அது பாரியதொரு பொறுப்பாகும்.அமைச்சர் என்ற ரீதியில் மேலதிகமாக எவ்வித வரப்பிரசாதங்களையும் அனுபிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கிறேன்.

உண்மையானஇவினைத்திறனான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு தியாகத்துடன் ஒன்றினைய வேண்டும்.
அதேபோல் அமைச்சுக்கு கீழ் உள்ள அரச நிறுவனங்கள் மோசடியில்லாத மக்கள் சேவைக்கான சிறந்த சேவை நிறுவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளன.
நிதி நெருக்கடியினை சீர்படுத்திக்கொள்வது அத்தியாவசியமானது.தற்போதைய நெருக்கடி நிலைமை மக்கள் கோரிய 'முறைமை மாற்றத்தை'அடைவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.

அதற்கான வாய்ப்பு புதிய அமைச்சரவைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.இளம் தலைமுறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த இரண்டரை வருடகாலமாக கொவிட் பெருந்தொற்று,அரசமுறை கடன்கள் உள்ளிட்ட பெரும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம்.

இருப்பினும் எம்மாலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன.தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேற்றமடைந்து மக்களின் நம்பிக்கையை  மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்திற்கு இதற்கு முன்னரே சென்றிருக்க வேண்டும்.
என்பதை முழுமையாக நம்புகிறேன்.விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு.விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்க உரிய நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம்.

பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் பல்வேறுப்பட்ட நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதையிட்டு மிகவும் வேதனையடைகிறேன்.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள பின்னணியில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நேரத்தை செலவிடும் மக்கள் வெளிப்படுத்தும் கோபம் மற்றும் வெறுப்பு நியாயமானது.

கடந்த காலங்களில் குறைப்பாடுகள் காணப்பட்ட போதும் நிகழ்கால  சவால்களை எதிர்க்கொள்வதும்,நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய எனது கடமையாகும்.

சவால்களுக்கு எதிர்க்கொள்ளாமல் ஒருபோதும் பின்வாங்கபோவதில்லை என்பதை என்மை நியமித்த மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.பொருளாதார மீட்சிக்காக பல முன்னேற்றகரமான தீர்மானங்களை எடுத்து அவற்றை தற்போது செயற்படுத்தியுள்ளேன்.

புதிய நிதியமைச்சர்,நீண்டகால அனுபவமுள்ளவர் மத்திய வங்கியின் ஆளுநராகவும்,திறைச்சேரியின் செயலாளர் புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க துறைசார் நிபுணர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடம் உண்மைமைய குறிப்பிட வேண்டும்.மக்கள் உண்மையை புரிந்துக்கொண்டால் மாத்திரமே தீர்வு காண முடியும்.

பொருளாதார  மீட்சிக்காகவும்,நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணவும் நட்பு நாடுகளுடனும்,உலக வங்கி,ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள்,மருந்து ஆகியவற்றை பெற்றுக்கொள்ள இந்தியாவிடமிருந்து கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
எரிவாயு,உரம்,பால்மா மற்றும் மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள உலக வங்கி ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.எரிபொருள்,எரிவாயு ஆகிய சேவைத்துறையில் காணப்படும் பிரச்சினைக்கு எதிர்வரும் வாரமளவில் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய கால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேடுவதோடு,இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக பல தசாப்தங்களாக  காலதாமதமாவி வரும் சில தீர்மானங்களை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியுள்ளது.

பொருளாதாரத்தை சரியான திசையில் வழிநடத்தி நமது எதிர்கால சந்ததியினரின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இப்போது எமக்கு உள்ளது.

இன்று எதிர்க்கொண்டுள்ள கடுமையான சவாலை எதிர்க்கொள்ள சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களைப் போன்று நட்பு நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டால் மாத்திரமே ஒத்துழைப்பு பெற முடியும்.நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்.அழைப்பை ஏற்று எம்முடன் இணைந்து செயற்பட இன்னும் வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராட்டங்கள்,ஊர்வலங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கியுள்ளேன்.
போராட்டங்களை கலைக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பெரும்பான்மையானவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் என்பதை எந்நிலையிலும் நம்புகிறேன்.அதனை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாக கருதுகிறேன்.

இனம்,மதம்,அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறை திருத்தி நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்கள்.

நாட்டை தோல்வியடைய செய்வதற்கு அல்ல என நம்புகிறேன்.ஆகவே ஜனநாயக போராட்டத்தை வன்முறை பாதையில் திசைத்திருப்பும் சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என இளைஞர்களி;டம் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான தீர்வு குறித்து மகாசங்கத்தினர்,அரசியல் தலைவர்கள் உட்பட பெரும்பாலானோர் முன்வைத்துள்ள யோசனைகளை உணர்வுபூர்வமாக கேட்கிறேன்.

69 இலட்ச மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.எனது பதவி காலத்தில் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன்.

அதன்படி தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளேன்.

நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை.அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன.
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவேயன்றி அதிகார தேவைக்காக அல்ல .

எனது வாழ்நாளில் முப்படைகளின் அதிகாரியாக 20 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளேன்.அத்துடன் பாதுகாப்பு செயலாளராகவும் சேவையாற்றியுள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில் அரசியமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுவேன்.

சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றிற்கு உண்டு.அரசியமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்றிக்கொள்ள  வாய்ப்புள்ளது.

அதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றிற்கு வழங்க தயாராகவுள்ளேன். அதற்கிணங்க நாட்டின் அதியுயர் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை செய்து இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிப்பதாக உறுதியளிக்கிறேன் என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி