ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும்  இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக ரம்புக்கன, ஹிங்குராக்கொட, பத்தேகம, திகன, கம்பளை, இரத்தினபுரி மற்றும் தெல்தெனிய ஆகிய பிரதேசங்களில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்தது. 

கலவரத்தை அடக்கிய பொலிஸார் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார். 

இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ரம்புக்கன போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது என்றார்.இன்று காலை ரம்புக்கனையில் இரயில் பாதையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அந்த மார்க்கத்தில் இரயில் சேவையும் தாமதமானது.

மேலும், ரம்புக்கனையில் பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் போராட்டக்காரர்கள் கற்களால் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் (IGP) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இதனிடையே ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் (IGP) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிசார் குறைந்தபட்ச பலத்தை கையாண்டதாக பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மாத்தறை, காலி, அளுத்கம, பாணந்துறை, அவிசாவளை மற்றும் மாவத்தகம ஆகிய இடங்களிலும் வீதிகள் தடைப்பட்டன.

மேலும், அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து அநுராதபுரத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி மற்றும் மாத்தறையிலும் இதேபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி