1200 x 80 DMirror

 
 

 

இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அரசாங்கத்தின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் காரணமாக பிரதிசபாநாயகர் பதவியிலிருந்து விலக போவதாகவும் நாளை மறுதினம்  மாத்திரம் பதவி வகிப்பதாகவும்  பிரதிசபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இலங்கையின் தற்போதைய நிலையை சமாளிக்க, சுமார் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு 
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தீர்வாகும் அதனை இல்லாதொழித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.


ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டக்களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி