முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு எதிராக பயணத்தடை கோரி முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய காலத்தில் செய்ததாக கூறப்படும் மோசடித் தொடர்பில் தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தனிப்பட்ட முறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி