புதிய அமைச்சரவை ஒரு கண் துடைப்பாகும் , தலைவலிக்கு மருந்து எடுக்க வேண்டுமே தவிர தலைவலிக்கு தலையணையை மாற்றி சரிவராது. இது எமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடவடிக்கை ஆகாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.


நாட்டில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மறை மாவட்ட போரயார் இல்லத்தில் திங்கட்கிழமை (18) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஆண்டகை ‍ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர் ,

இந்நாடு ஆட்சியாளர்களுக்கு சொந்தமானது கிடையாது. இது மக்களுக்கு சொந்தமான நாடாகும். ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் இந்த நாட்டை நிர்வகிப்பவர்கள் மாத்திரமே ஆவர். இந்நாட்டின் முழு உரிமையும் இந்நாட்டு மக்களுக்கே உரியது.

ஊழல், மோசடியில் ஈடுபடுவோரின் பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவரப்படுவது அவசியம்.

" காலி முகத்திடலில் இளம் சமுதாயத்தினரால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்தை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அடிபணியச் செய்வதற்கு முயற்சி எடுப்பார்களாயின், அது முழு நாட்டு மக்களையும் தாக்ககின்ற சம்பவமாகவே நான் பார்க்கின்றேன்.

தான்தோன்றித்தனமாக செயற்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கொள்கைகளை இல்லாதொழிக்க வேண்டும். ஜனநாயகத்தை அடிபணியச் செய்யும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை எங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆள் பலம் மற்றும் ஆயுத பலம் போன்றவற்றைக் கொண்டு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காது, அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதை ஏற்க முடியாது.

மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பது அவர்களின் பொறுப்பாகும். பொருளாதார நெருக்கடி எனும் வலையில் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு சகல கட்சித் தலைவர்களும், மக்களும் இன, மத, சாதி , பேதங்களை மறந்து ஒன்றாக செயற்பட வேண்டியது அவசியம்.

நாட்டின் நீதித்துறை உயர்ந்ததாக காணப்பட வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்கள் அல்ல. நீதித்துறை எந்த வித இடையூறுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவது அவசியமாகும்.

தற்போது அரசாங்கத்திலுள்ள சகலரும் பதவி விலகி இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பெளத்த மதத் தலைவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளையும் இந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்காது செயற்பட்டு வருகின்றனர் . என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி