ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முதல்கட்ட உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதாக இரு தரப்பும் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளன. 

மஹர சிறைச்சாலையில் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து,கைதிகள் நடத்திய போராட்டங்களை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் உடல்களை எரியூட்டுவதற்கான ஏற்பாட்டிற்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரண்டு நாட்களுக்குள் விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிட ஏதுவாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் 1990களில் இருந்து காத்திருந்திருக்கிறார்கள்.

புரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொவிட்19 தொற்றின் இரண்டாம் அலை கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களைப் பாதித்திருக்கின்றது. கிழக்கின் பல இடங்களில் குறுகிய காலப் பகுதியில் தொற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. இப்பிரதேசங்களில் பிரதானமானது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆகும். 

நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகள் குறித்த தகவல்களைப் பெற நீதிச் சேவை ஆணைக்குழு, டிஜிட்டல் இணையவழி தகவல் சேகரிப்பு முறையை உருவாக்கியுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் உடல்நிலையில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியல் முடிவு குறித்து சிந்தியுங்கள் என கூறியிருப்பதாக அவரை சந்தித்து விட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இன்று பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் ” புரவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி