கொவிட்19 தொற்றின் இரண்டாம் அலை கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களைப் பாதித்திருக்கின்றது. கிழக்கின் பல இடங்களில் குறுகிய காலப் பகுதியில் தொற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. இப்பிரதேசங்களில் பிரதானமானது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆகும். 

அக்கரைப்பற்று நகர் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வர்த்தக நகர் ஆகும். இந்நகரைச் சூழவுள்ள கிராமங்களில் வசிப்போர் எப்போதும் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்ற நகர் இது. சந்தைகள், வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் என்றெல்லாம் அமைந்துள்ள அக்கரைப்பற்று எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவதுண்டு.

ஆனால் இன்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய்க் காணப்படுகின்றது அக்கரைப்பற்று.

கிழக்கில் தொற்று எண்ணிக்கை விபரங்களை சரியாக பதிவிட முடியாதிருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பி.சி.ஆர் முடிவுகளின் போதும் புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டே வருகின்றனர். கடந்த 3 தினங்களாக எடுத்த பி.சீ.ஆர் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அப்போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

கிழக்கில் நேற்றுமுன்தினம் மாலை நிலைவரப்படி கல்முனை பிராந்தியத்திலேயே அதிக தொற்றாளர்கள் (138) இனங் காணப்பட்டிருந்தனர். அதிலும் அக்கரைப்பற்று கொத்தணி 109 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருந்தது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது. கிழக்கிலுள்ள ஐந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 445 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.12.2020 வரை 1218 பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 07பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 18கட்டில்களே எஞ்சியிருந்தன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் 465பேர் அனுமதிக்கப்பட்டு 319பேர் குணமடைந்து வெளியேறியதால் 142 பேர் தங்கியிருந்தனர்.

நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர். ஈச்சி லம்பற்று சிகிச்சை நிலையத்தில் 56 பேரும், கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 101 பேரும், பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67பேரும், பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 12,325 பேரில் 9877 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கிழக்கில் அக்கரைப்பற்று கொத்தணி 109 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. அக்கரைப்பற்று கொத்தணிக்கான மூலம் அல்லது தோற்றுவாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியிருந்த போதிலும் அக்கரைப்பற்றுக்கான தொற்று தம்புள்ளை சந்தையிலிருந்து வந்ததா? என்றதொரு கேள்வியும் எழாமலில்லை. அக்கரைப்பற்று சந்தை மூலமாக 100 இற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு இலக்காகியுள்ளளனர் என்பது மட்டும் உண்மை. 

அக்கரைப்பற்று நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் சில நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவசரமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவை கண்டிப்பான சுகாதார பாதுகாப்பான வலயமாக பிரகடனம் செய்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுவதுடன் அவசியமான சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொரு பிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் 109 பேர் இனங் காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் இருந்தே பலருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை கண்டுபிடி க்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றில் சந்தேகத்துக்கு இடமானோரில் எடுக்கின்ற பி.சி.ஆர் மாதிரிகளில் 20 வீதமானவை ‘பொசிட்டிவ்’ ஆகவே காணப்படுகின்றன.

“மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். கடந்த 5 நாட்களாக 800 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.

420 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்.ஆகவே இன்னும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சாத்தியம் இருக்கின்றது” என்கிறார் டொக்டர் சுகுணன்.

“13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் அன்டீஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்கின்றோம். சுமார் 1000 மாதிரிகளை பெற தீர்மானித்துள்ளோம். இச்செயற்பாட்டை பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்” என்றார் அவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி