குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. போலி சாட்சியம் தயாரித்து, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பல் ஷானி அபேசேகர மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இவ்வாறு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.  

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது தனது சகோதரர் வேண்டுமென சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். 

தம்மிக பண்டார என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காயாக இருந்தாலும் அது சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல என ஆயுர்வேத விசேட வைத்தியர் ஆனந்த விஜேரத்ன கூறுகிறார்.

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஐந்து வருடங்களில் பதினைந்து பொலிஸ் அதிகாரிகள் குற்றங்களை தடுக்கும் சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி நேற்று அதிகாலை 5 மணிமுதல் காத்திருந்தனர். இவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர். 

பிரிட்டனில் பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்–19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பமாகிறது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறவுள்ளது. 

கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெல்லி அருகே நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கிளம்ப முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று எப்படியோ போராடும் விவசாயிகளோடு போய்ச் சேர்ந்துகொண்டனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி