ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முதல்கட்ட உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதாக இரு தரப்பும் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளன. 

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது உட்பட முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு வகைசெய்துள்ளது. 

‘பேச்சுவார்த்தையில் முதற்கட்ட நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதிலிருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்’ என்று ஆப்கான் அரசு பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான நாதர் நதரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனை தலிபான்களும் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்கானில் இரு தரப்பும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. அரச படைகள் மீதான தலிபான்களின் தாக்குதல்கள் குறைவின்றி நீடித்து வருகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி