இலங்கை எனும் கப்பலை செலுத்தும் கோட்டாபய எனப்படும் மீகாமன் கப்பல் போக்குவரத்து தொடர்பில் எதுவித அனுபவமுமற்ற புதியவர் என்று கருதலாம். அவர் அப்பதவியை அடையும் போது கப்பல் அமைதியான கடற்பிரதேசத்தில் அன்றி கப்பல்கள் பயணிக்காத கொந்தளிப்பான பிரதேசத்திற்கு தள்ளிச் செல்லப்பட்டிருந்த நிலையில் கப்பல் காணப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் பெண் வாக்காளர்களை மையமாக வைத்து வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் அரசியல் கட்சிகள், பெண் வேட்பாளர்களை களத்தில் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை. பலமான இரண்டு திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள், பெண்களின் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. அவை யதார்தத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில்லை என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை எதிர்க்கட்சியான தி.மு.கவும் ஆளும் அ.தி.மு.கவும் வெளியிட்டு வருகின்றன. அதிலும், தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதுதவிர, 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் 8,97,694 பேரும் உள்ளனர்.

மலையக முஸ்லிம் மக்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசாரணை அறிக்கையை வெளியிடத் தவறியுள்ளது.

ஆசியாவில் அழிந்து வரும் இனமாக இருக்கக்கூடிய பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பது என்பது இளைஞர்கள் இல்லை என்றால் நடக்காத ஒரு காரியமாக இருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார்.

புதன்கிழமை மதியம் டொனால்ட் ட்ரம்ப் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட உரை அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான ஒரு போர் பிரகடனமாக இருந்தது. அது தேர்தல் முடிவுகளைத் தூக்கியெறிந்து ஒரு வலதுசாரி கிளர்ச்சிக்கு அழைப்புவிடுப்பதுடன், அமெரிக்க மக்கள் புறக்கணித்துள்ள ஒரு ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பதற்கான பெரிதும் மூடிமறைக்கப்படாத ஓர் அழைப்பாக இருந்தது. 

“நான் இதுவரையில் வழங்கியிராத மிக முக்கிய உரை" என்று ட்ரம்ப் எதை குறிப்பிட்டாரோ அந்த 46 நிமிட பழியுரை, கடந்த மூன்று வாரங்களாக ட்ரம்ப் வழக்கறிஞர்கள் ரூடி கிலானி, ஜென்னா எல்லிஸ் மற்றும் சிட்னி பாவெல் ஆகியோர் ஊக்குவித்த வாக்குகளை "மாற்றுவதற்காக" கணினி மென்பொருள் பயன்படுத்தப்பட்டமை, வாக்கு மோசடி, கள்ள வாக்கு இடுதல் ஆகிய போலி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தழுவி இருந்தது. இத்தகைய குற்றச்சாட்டுக்கள், ஒரு மாநிலம் மாற்றி இன்னொரு மாநிலத்தில், நீதிமன்றங்களில் எந்தவொரு துணுக்கு ஆதாரமும் இல்லாததற்காக, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நீதிபதிகளால் ஒன்றுபோல, கேலிக்குரியதாக ஆகியுள்ளன.

நவம்பர் தேர்தல் "சூழ்ச்சியால் சீர்குலைக்கப்பட்டிருப்பதாக" அறிவித்த ட்ரம்ப், கடும் போட்டி நிலவும் எல்லா மாநிலங்களிலும் முடிவுகளை மாற்றி, அவரை வெற்றியாளராக அறிவிக்கவும், மற்றும் அவற்றின் மக்கள் வாக்குகளை அவருக்கு வழங்கவும் மற்றும் அவ்விதத்தில் அவரே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருக்கவும் செய்ய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமென கோரினார்.

ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் பெரும்பாலான மாநில தேர்தல் அதிகாரிகளைக் குற்றவாளிகளாக முத்திரை குத்தும் இந்த உரையின் பிரதான நோக்கம், வெள்ளை மாளிகையில் அமர்ந்திருக்கக்கூடிய ஹிட்லர் போன்ற தலைவர் இலக்கு வைக்கும் எவரொருவருக்கு எதிராகவும் வன்முறை தாக்குதல்களை நடத்த ட்ரம்பின் மிகத் தீவிர பின்தொடர்பாளர்களைத் தூண்டுவிடுவதாக இருந்தது. “இந்த அமெரிக்கா ஜனாதிபதியைக் காயப்படுத்த விரும்பும்" எவரொருவரையும் கண்டித்த ட்ரம்ப், “ஏதாவது நடந்தாக வேண்டும்,” என்று கோரினார். “நாம் அமெரிக்காவை முதலில் நிறுத்தி உள்ளதால் இத்தகைய பலமாக வேரோடிய நலன்கள் நம் இயக்கத்தை எதிர்க்கின்றன,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த உரையின் மொழியும், அந்த வாதத்தின் கடுமையான மற்றும் ஜனநாயக விரோதமான தொனியும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்ப் போருக்கு முன்னிலை வகித்த ஸ்டீபன் முல்லரால், அனேகமாக ட்ரம்பின் முன்னாள் உயர்மட்ட அரசியல் ஆலோசகரான ஸ்டீவ் பானன் உதவியுடன் எழுதப்பட்டிருக்கலாம் என்பதை அறிவுறுத்துகிறது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, ட்ரம்பையே தலைவராக கொண்டு, குடியரசுக் கட்சியை பகிரங்கமாக ஒரு பாசிசவாத இயக்கமாக மாற்றுவதற்கு மில்லெர் மற்றும் பானன் இருவரும் ட்ரம்புக்கான முன்னணி ஆலோசகர்களாக இருந்துள்ளனர்.

ட்ரம்பின் மிகவும் பணிவடக்கமான அரசியல் சேவகர்களில் ஒருவரான அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் செவ்வாய்க்கிழமை ஒரு பேட்டியில் பின்வருமாறு எதிர்ப்பின்றி இணங்கி செல்வதற்கு முன்னரே கடந்த வாரம் ட்ரம்ப் அந்த உரையைப் பதிவு செய்திருந்தார் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்: “தேர்தல் முடிவை மாற்றி இருக்கக்கூடிய அளவிலான மோசடி எதையும் இன்று வரையில் நாம் காணவில்லை,” என்று தெரிவித்திருந்தார். பொய் எந்தளவுக்கு பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு நல்லது என்ற ஹிட்லர் மற்றும் கோயபல்ஸின் கோட்பாடுகளை ட்ரம்ப் உரை கருத்தில் கொண்டிருந்தது என்பதை மட்டுமே அந்த ஒப்புதல் எடுத்துக்காட்டுகிறது.

இந்த உரை வெளியான நேரம் குறிப்பிடத்தக்கது. அது, உயர்மட்ட ஜோர்ஜிய தேர்தல் நிர்வாகி, நீண்டகால குடியரசுக் கட்சி விசுவாசியான இவர், வன்முறை அச்சுறுத்தல்கள் செய்து வருவதற்காக அவர் மீது பழிசுமத்தி, ட்ரம்பைத் தனிப்பட்டரீதியில் அசாதாரணமாக பகிரங்கமாக கண்டனம் செய்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வெறும் 24 மணி நேரத்திற்குப் பின்னர் வந்தது. தேர்தல் தகவல்தொழில்நுட்ப பணியாளர் ஒருவரின் வீட்டில் தூக்குக் கயிறு தொங்கவிடப்பட்டதையும், மாநில செயலர் பிரட் ரஃப்பென்ஸ்பேர்கர், அவர் மனைவி, ஸ்டெர்லிங்கிற்கும் மற்றும் அம்மாநில வாக்குகள் எண்ணுவதிலும் தொகுப்பதிலும் சம்பந்தப்பட்ட இன்னும் பலரையும் நோக்கி விடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மரண அச்சுறுத்தல்களையும் காப்ரியல் ஸ்டேர்லிங் சுட்டிக்காட்டினார்.

ஸ்டேர்லிங்கின் கருத்துக்கள் வெளிப்படையாக ட்ரம்ப் மீது பழிசுமத்தின. “திரு. ஜனாதிபதி, நீங்கள் இந்த மொழியையோ அல்லது இத்தகைய நடவடிக்கைகளுக்கோ கண்டனம் தெரிவிக்கவில்லை,” என்றார். “இது நிறுத்தப்பட வேண்டும்.” ஜோர்ஜியாவின் நவம்பர் 3 தேர்தல் விதிமுறைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலை ஆதரித்து, ரஃப்பென்ஸ்பேர்கர் இராஜினாமா செய்ய வேண்டுமென அழைப்புவிடுத்துள்ள ஜோர்ஜியாவின் இரண்டு குடியரசுக் கட்சி செனட்டர்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

“செனட் உறுப்பினர்களே, இந்த மொழியையோ அல்லது இத்தகைய நடவடிக்கைகளையோ நீங்கள் கண்டிக்கவில்லை,” என்றார். “வன்முறை நடவடிக்கைகள் நடத்துமாறு மக்களைக் கிளறிவிடுவதை நிறுத்தங்கள்,” என்றார். ஜோர்ஜியாவின் 16 தேர்வுக்குழு வாக்குகளை ட்ரம்ப் இழந்துவிட்டதாக தெரிகிறது —இரண்டு மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பின்னரும் அவர் பைடெனை விட சுமார் 13,000 வாக்குகள் பின்தங்கி உள்ளார்— அதேவேளையில் இரண்டு குடியரசுக் கட்சி செனட்டர்களும் பெரும்பான்மை பெறவில்லை, மேலும் ஜனவரி 5 இரண்டாவது கட்ட தேர்தலில் அவர்கள் ஜனநாயகக் கட்சி போட்டியாளர்களை முகங்கொடுப்பார்கள் என்று ஸ்டேர்லிங் தெரிவித்தார்.

பெடரலின் இணையவழி பாதுகாப்புத்துறை முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் கிரெப்ஸ் வாக்கு திருட்டு எதுவும் நடக்கவில்லை என்று அறிவித்ததற்காக அவரை "சூரிய உதயத்தில் சுட்டுக் கொல்ல" அழைப்பு விடுத்த ட்ரம்ப் தேர்தல் குழு வழக்கறிஞர் Joe diGenova இன் கருத்துக்களுக்கு ஜோர்ஜியாவின் குடியரசுக் கட்சி அதிகாரியும் கண்டனம் தெரிவித்தார். “யாரோ அடிபட இருக்கிறார்கள்,” என்று ஸ்டேர்லிங் நிறைவு செய்தார். “யாரோ சுடப்பட இருக்கிறார்கள். யாரோ கொல்லப்பட இருக்கிறார்கள்,” என்றார்.

இந்த விமர்சனம் தேர்தலைக் குறித்த அமெரிக்க ஊடக செய்திகளில் பரவிய 24 மணி நேரத்திற்குப் பின்னர், இந்த சூழலில் வெளியான ட்ரம்பின் பேஸ்புக் உரை, ஸ்டேர்லிங் மற்றும் ஏனைய அதிகாரிகள் எதைக் குறித்து எச்சரித்தார்களோ அந்த வன்முறையை அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறார் என்ற தெளிவான அர்த்தத்தைக் கொடுக்கிறது.

அங்கே அந்த வெள்ளை மாளிகை குற்றவாளிக்கும் அதற்கு வெளியே உள்ள அவரின் மிகவும் வன்முறையான மற்றும் பிற்போக்குத்தனமான பின்தொடர்வாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. செவ்வாயன்று, அமெரிக்க மூலதனத்தின் அதிவலது நாளிதழ் வாஷிங்டன் டைம்ஸ், ஓஹியோவை மையமாக கொண்ட We The People Convention என்ற பாசிசவாத குழு, ட்ரம்ப் இராணுவச் சட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராணுவத்தின் மேற்பார்வையில் புதிய தேர்தலுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அழைப்புவிடுத்து அது விலைக்கு வாங்கிய ஒரு முழு பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டது.

“சர்வதேச மற்றும் உள்நாட்டு சோசலிச/கம்யூனிச இடதால் நமது அமெரிக்காவுக்கான அச்சுறுத்தல்" இருப்பதாக கண்டித்த அந்த விளம்பரம், “நிறைய நிதியுதவி பெறும், ஆயுதமேந்திய, ANTIFA மற்றும் BLM இல் பயிற்சி பெற்ற மார்க்சிஸ்டுகள் நமது பிரதான நகரங்களில் மூலோபாயரீதியில் நிலைநிறுத்தப்பட்டு" இருப்பதைக் குறித்து எச்சரித்ததுடன், அந்த தேர்தலை "ஊழல் மற்றும் நிரூபிக்கத்தக்க மோசடி" என்று குறைகூறியது.

அந்த பத்திரிகை இந்த கிறுக்குத்தனமான வில்லங்க விளம்பரத்தைப் பிரசுரிக்க உடன்பட்டது என்பது மட்டுமல்ல, மாறாக ட்ரம்புடன் நெருக்கமாக அடையாளம் காணப்படும் இரண்டு பிரமுகர்கள் இராணுவச் சட்டத்திற்கான அதன் அழைப்பை அவர்கள் ஆமோதிப்பதாக உடனடியாக ட்வீட் செய்தனர். அவர்கள்: பொய்சாட்சி வழங்கிய குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட பின்னர் கடந்த வாரம் ட்ரம்பால் சர்வசாதாரணமாக மன்னிக்கப்பட்ட ட்ரம்பின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற ஜெனரல் மைக்கெல் ஃப்ளென், மற்றவர், பல மாநிலங்களில் ட்ரம்ப் தேர்தல் பிரச்சார சவால்களுக்குத் தலைமை வகித்துள்ள ஒரு வழக்கறிஞர் லின் வூட். விஸ்கான்சின் கெனோசாவில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடியவர்களில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற, சட்டத்தை தன் கையில் எடுத்த ட்ரம்ப் ஆதரவாளர் கெய்ல் ரிட்டன்ஹவுஸை வூட் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

அமெரிக்கா "உள்நாட்டு போரை நோக்கி செல்கிறது" என்று அறிவித்த ஃப்ளின் மற்றும் வூட் இருவருமே, ட்ரம்ப் நிர்வாகத்தைத் தூக்கியெறியும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி "கம்யூனிஸ்ட் சீனா" உடன் அணிசேர்ந்திருப்பதாக வாதிட்டனர். ஜோர்ஜியா ஆளுநர் ஒரு குடியரசுக் கட்சியாளரான பிரைன் கெம்ப் "ஒரு நம்பிக்கை துரோகியும் ஒரு குற்றவாளியும்" ஆவார் என்றும், அவர் தேர்தலைப் பைடெனுக்கு வழங்குவதற்காக சீனாவிடம் இருந்து பின்புல கையூட்டுகள் பெற்றிருப்பதாகவும் வூட் வாதிட்டார்.

தானே தேர்தலை ஜெயித்திருப்பதாகவும் பதவியில் தொடர்ந்து இருக்கப் போவதாகவும் ட்ரம்பின் பகிரங்க பிரகடனத்திற்கு ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களின் ஜனநாயகக் கட்சி ஆதரவு பிரிவுகளும் வாய் திறக்காமல் விடையிறுத்துள்ளன. இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், பைடென் பிரச்சாரக் குழு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, அல்லது பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அல்லது செனட்டர்கள் சக் சூமர், பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் போன்ற காங்கிரஸ் சபையிலுள்ள முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் வாய்திறக்கவில்லை. அவர் தோற்கடிக்கப்பட்ட தேர்தல் ஒரு மோசடியானது என்று அமெரிக்காவின் ஜனாதிபதி அறிவிப்பது குறித்து மாலை நேர செய்தி ஒளிபரப்பு வலையமைப்புகள் எதுவும் மிகச் சிறியளவிலேயே செய்தி வெளியிட்டுள்ளன அல்லது எந்த செய்தியும் வெளியிடவில்லை. எந்தவித பெரிய முக்கியத்துவம் இல்லாத முந்தைய மதிப்பிழந்த வாதங்களே மறுசுழற்சி செய்யப்படுவதாக ட்ரம்பின் பேச்சுக்களைக் கேபிள் வலையமைப்புகள் உதறித் தள்ளின.

மிச்சிகனில் பாசிசவாத ட்ரம்ப் ஆதரவாளர்கள் அம்மாநில ஜனநாயகக் கட்சி ஆளுநரைக் கடத்திக் கொல்ல தயாரிப்பு செய்தபோது அவர்கள் மிச்சிகனில் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடுகளுடன் இந்த நிலைப்பாடு பொருத்தமாக இணைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக நீக்கப்பட்டிருந்த கொரொனா வைரஸ் அடைப்பு அந்த ஆளுநரால் மீண்டும் கொண்டு வரப்பட்டத்திலிருந்து "மிச்சிகனை விடுவிக்க" தனது பின்தொடர்பவர்களுக்கு அழைப்புவிடுத்த ஒரு ட்வீட் உட்பட, கிரெட்சென் விட்மர் எண்ணற்ற ட்ரம்ப் தாக்குதல்களின் இலக்கில் வைக்கப்பட்டிருந்தார்.

ஜனநாயக கட்சியினர், வன்முறை மற்றும் சர்வாதிகாரம் தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தலைக் குறித்து பயப்படவில்லை, மாறாக ட்ரம்ப் அவரின் நீண்டகால அச்சுறுத்தலாக உள்ள தேர்தல் கவிழ்ப்பு சதியை உண்மையில் நடத்த முயன்றால் எழக்கூடிய பாரிய மக்கள் கிளர்ச்சி குறித்து பயப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இரண்டு தரப்புமே சேவையாற்றும் செல்வம் கொழித்த நிதிய செல்வந்த தட்டுக்களுக்கும் உயிர்பிழைப்புக்கே போராடி வரும் பாரிய பெருந்திரளான மக்களுக்கும் இடையே ஆழமாக பிளவுற்று, அமெரிக்கா ஒரு சமூக வெடி உலையாக நிற்கிறது என்பது ஜனநாயகக் கட்சியினருக்கு நன்கு தெரியும்.

ஆளும் வர்க்கத்தின் மனிதப்படுகொலை கொள்கைகளின் விளைவாக கொரொனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி சுழன்று வருகின்ற நிலையில் தான் ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் வருகின்றன. நாளாந்தம் சராசரி மரண எண்ணிக்கை வசந்த காலத்தில் முந்தைய உச்சத்தை எட்டி வருகின்றன, நாடெங்கிலுமான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் ரோபர்ட் ரெட்பீல்ட் புதன்கிழமை எச்சரிக்கையில், அடுத்த சில மாதங்கள் "இந்நாட்டின் பொது சுகாதார வரலாறில் மிகவும் சிரமமானதாக" இருக்கும் என்றார்.

தொலைக்காட்சி வலையமைப்புகளும் ஏனைய ஊடகங்களும் பைடென் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று "அழைத்து" பல நாட்களுக்குப் பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், பைடென் அவரின் மந்திரிசபையை மற்றும் வெள்ளை மாளிகை பணியாளர்களை ஒன்றுதிரட்ட தொடங்கியதும், சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எச்சரித்தது:

அடுத்த 65 நாட்களுக்கு அமெரிக்காவின் நிர்வாக பதவியின் தலைமையில் ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக தங்கியுள்ளார், அரசியல் நிலைமை வெவ்வேறு திசைகளில் நகரக்கூடும். ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், சட்டப்படி தேர்தல் செல்தகை இழந்துவிட்டதாகவும் அவரே உரிமை கொண்ட ஜனாதிபதி என்றும் வாதிடுவதற்காக "முதுகில் குத்தப்பட்டதாக" கூறும் சொல்லாடலை அவர் உருவாக்கி வருகிறார்.

இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாசிசவாத பேஸ்புக் உரையில் மட்டுமல்ல, மாறாக அமெரிக்க இராணுவப் படைகளை அவரின் சொந்த தனிப்பட்ட விசுவாசிகளின் திசையில் நிறுத்துவதற்கும், ஈரானுடனான ஒரு போர் போன்ற ஒரு சர்வதேச நெருக்கடியைத் தூண்டிவிடுவதற்கான அவர் முயற்சிகளுக்காகவும், இது உள்நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்கவும் பாரிய ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும் ஒரு சாக்குபோக்கை வழங்கும் என்கின்ற நிலையில், இதற்காக பென்டகன் தலைமையை அவர் மாற்றி அமைத்திருப்பதிலும் இந்த எச்சரிக்கை நிறையவே ஊர்ஜிதமாகி உள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இந்த ஆக்ரோஷமான நெருக்கடிக்குள் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட வேண்டும் என்பதே மத்திய கேள்வியாக நிற்கிறது. ட்ரம்பை எதிர்ப்பதற்காக, தொழிலாளர்களும் இளைஞர்களும், முற்றிலும் நிதியியல் செல்வந்தத் தட்டின் ஒரு பிற்போக்குத்தனமான கருவியாக உள்ள ஜனநாயக கட்சியின் பாகத்தில் ஒரு நிமிடம் கூட தங்கியிருக்க முடியாது. ட்ரம்ப் வெள்ளை மாளிகை மற்றும் அதன் பாசிசவாத குண்டர்களின் சூழ்ச்சிகளைத் தொழிலாள வர்க்கம் அதன் வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான அரசியல் போராட்ட அணுகுமுறைகளைக் கொண்டு எதிர்க்க வேண்டும்.

பஞ்சாப் பாட்டியாலா மாவட்டத்தில் அறுவடைக்கு பிறகு எரிக்கப்படும் காய்ந்த பயிர்களை பார்வையிடும் விவசாயி அவ்தார் சிங்வட இந்தியாவில் நடக்கும் பயிர்த்தாள் (பயிர் கழிவுகள்) எரிப்பு என்பது பல வருடங்களாகவே காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனாலும் அதை நிறுத்தும் முயற்சி, வருடந்தோறும் தோல்வி அடைந்து விடுகிறது இது ஏன்? 
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில், தனது நெல் வயலில் இருந்து வெளியேறுகிற புகையால் சூழப்பட்டிருக்கிறார் அவதார் சிங். 

 

இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர். இந்நிலையில், 20,000 ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை மீண்டும் சுகாதாரப் பணிக்கு திரும்புமாறு இத்தாலிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் மூலவளம் குறைந்த தெற்கு பகுதியில் கொரொனாவைரஸ் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என இத்தாலிய அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி