1200 x 80 DMirror

 
 

இலங்கை எனும் கப்பலை செலுத்தும் கோட்டாபய எனப்படும் மீகாமன் கப்பல் போக்குவரத்து தொடர்பில் எதுவித அனுபவமுமற்ற புதியவர் என்று கருதலாம். அவர் அப்பதவியை அடையும் போது கப்பல் அமைதியான கடற்பிரதேசத்தில் அன்றி கப்பல்கள் பயணிக்காத கொந்தளிப்பான பிரதேசத்திற்கு தள்ளிச் செல்லப்பட்டிருந்த நிலையில் கப்பல் காணப்பட்டது.

அதன் பின்னர் அவர் அனுபவசாலிகளின் அறிவுரைகளை செவிமடுத்து கப்பலைச் கொந்தளிப்பான கடற் பிரதேசத்தில் இருந்து அமைதியான பிரதேசத்தை நோக்கிச் செலுத்துவதற்குப் பதிலாக மிகவும் தான்தோன்றித்தனமாக கப்பலை அமைதியான பிரதேசத்துக்கு இலகுவில் எடுக்கவே முடியாத வகையில் தொடர்ந்தும் கொந்தளிப்பான பிரதேசத்தின் மையப்பகுதிக்கு கப்பல் இழுபட்டுச் செல்லும் வகையிலும் கப்பல் மற்றும் அதன் பயணிகளுடன் சேர்ந்தே பாரிய அழிவுக்குள்ளாகும் வகையிலும் கப்பலைக் கையாளத் தொடங்கினார்.

இந்த விசேட கப்பலில் எப்போதும் அதன் மீகாமன் பயணிகளின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுபவராக இருப்பார். ஆச்சரியப்படத்தக்க வகையில் பயணிகளின் பெரும்பான்மையான வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டவர் கப்பல் அல்லது கப்பல் பயணம் குறித்து அரிச்சுவடி கூட அறியாத ஒருவராகும். குறித்த போட்டியில் போட்டியிட்டு தோல்வியுற்ற பிரதான வேட்பாளர்கள் இரண்டு பேரும் கப்பலினுள் இருக்கின்றனர்.

கப்பல் அசாதாரணமான முறையில் நீண்ட காலமாக துறைமுகமொன்றுக்கு கொண்டு செல்லப்பட முடியாமற் போன காரணத்தினால் பயணிகளுக்குத் தேவையான உணவுகள் மட்டுமன்றி குடிநீரும் கூட சாதாரண விலைகளை விட மிக அதிக விலைக்கும் மற்றும் பங்கீட்டு முறையிலுமே வழங்கப்பட வேண்டியுள்ளது.

கப்பலுக்குத் தேவையான எரிபொருளும் தீர்ந்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் முற்றாகத் தீர்ந்து போனால் பொதுவாக கப்பல்கள் பயணிக்காத கொந்தளிக்கும் கடற்பிரதேசத்தில் இருந்து கப்பலை வௌியில் கொண்டு வரமுடியாத நிலையும் ஏற்படலாம். கப்பலின் பயணிகள் தற்போதைக்கு கப்பலின் மீகாமன் மீது கோபத்துடனும், தங்களது எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் சந்தேகத்துடனும் காணப்படுகின்றனர். கப்பலின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதுடன் கேப்டன் தன் பதவியிலிருந்து தானாக முன்வந்து விலகிக் கொண்டால் அன்றி சட்டரீதியாக அவரை அகற்றவும் வழியில்லை.

கேப்டனின் பிரதான போட்டியாளர்கள் இரண்டு பேரும் கேப்டன் மேற்கொள்ளும் தவறுகள் அதிகரிக்கும் அளவுக்கு அது தங்களுக்கு சாதகமாக அமையலாம் என்ற சிந்தனையில் இருப்பது போன்று தெரிகின்றது. அந்த நிலைமை எதிர்வரும் தேர்தலின் போது தாங்கள் அதிகாரத்தை அடைந்து கொள்வதை இலகுவாக்கும் என்று அவர்கள் கருதுவது போன்று தெரிகின்றது.

எரிபொருள் தீர்ந்து போகும் நிலை காரணமாக கப்பல் எரிபொருளினால் பயணிக்கும் ஆற்றல் முற்றாக இழக்கப்பட்டால் கொந்தளிப்பான கடற்பிரதேசத்தில் இருந்து கப்பலை வௌிக்கு கொண்டு வர முடியாத நிலை காரணமாக கப்பலின் பயணிகளுக்கு மாத்திரமன்றி கப்பலுக்கும் பாரிய சேதம் ஏற்படும் என்பதை அந்த மாற்றுத் தலைவர்கள் இரண்டு பேரும் புரிந்து கொண்டதாக தொியவில்லை.

விடுவிப்பதற்கு கடினமாக குறித்த ஆழமான பிரச்சினை நாட்டினதும் நாட்டு மக்களினதும் இருப்பை நிச்சயமற்ற தன்மைக்குள்ளாக்கும் புதிராக மாறியிருப்பதாக கூற முடியும்.

கோட்டாபயவின் தோசம்

ஜனாதிபதி கோட்டாபயவின் தனித்தன்மையான தோசம் என்னவென்றால் எந்தளவுக்குத் தான் மக்கள் ஆணையைப் பெற்ற ஆட்சியாளராக இருந்த போதும் ஒருபோதும் செய்யக் கூடாத விடயங்கள் யாவை என்பதை அறிந்திருக்காது அல்லது தெரிந்து கொண்டே அவற்றை மீறிச் செயற்படுவதாகும். தனக்கும் தனது முக்கிய அரசியல் சகாக்களுக்கும் எதிராக விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சுமார் ஐம்பது வழக்குகளை வாபஸ் பெற்றமை அதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். சிறுகுழந்தையொன்று உள்ளிட்ட தமிழர்களை கூட்டுப் படுகொலை செய்த விடயத்தில் குற்றவாளியாகி சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவரை விடுதலை செய்தமை சுட்டிக்காட்டப்படக் கூடிய இன்னொரு உதாரணமாகும். நாடு ஒரு தொற்றுநோய்ப் பரம்பல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்தில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு முடிந்த மட்டிலும் நாட்டைச் சூறையாட இடமளிக்கும் கொள்கையொன்றை கடைப்பிடிப்பது அது தொடர்பில் குறிப்பிட்டுக் கூறத் தக்க மூன்றாவது உதாரணமாகும். இனம் மற்றும் மதப்பிரிவினைவாத கொள்கையைக் கையாண்டு சிறுபான்மையினர் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பயங்கரவாத விசாரணை பிரிவு, பொலிசார் மற்றும் உளவுப் பிரிவினரை பயன்படுத்துவது நான்காவது உதாரணமாக சுட்டிக்காட்ட முடிவதுடன் கடன் நிலுவைத் தொகை நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியுமான நிலையில் அவ்வாறு செய்வதை நிராகரிப்பது அதற்கான ஐந்தாவது உதாரணமாக குறிப்பிட்டுக் காட்டலாம். ஆறாவது உதாரணமாக விவசாய பயிர்ச்செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனப் பசளைகள் மற்றும் ரசாயன உள்ளீடுகள் இறக்குமதியைத் தடை செய்து அதற்குப் பதிலாக சேதனப் பசளை பயன்படுத்துமாறு நிர்ப்பந்தப்படுத்தும் முட்டாள்தனமானதும் நாசகாரத்தன்மை கொண்டதுமான கொள்கையொன்றைப் பின்பற்றுவதாகும்.


ஜனாதிபதியின் மேற்குறிப்பிட்ட சகல தவறுகள் மத்தியிலும் சிறுபான்மையினரை நெருக்கடிகளுக்குள் சிக்குப்படுத்துவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் பொலிசாரை பயன்படுத்தி அவர்கள் மத்தியில் பாரிய அச்சமொன்றை ஏற்படுத்தி அவர்களின் மானிட கௌரவத்தை இல்லாமலாக்கும் வகையில் அந்த சமூகப் பிரிவினரை செயலற்ற கீழ்ப்படிந்து செயற்படக் கூடிய பயந்தாங்கொள்ளி நிலைமைக்கு மாற்றும் வகையில் கைக்கொள்ளப்படும் வழிமுறைகள் மிக மோசமான மனிதாபிமானமற்ற, குரூரமானதும் ஏனைய உயிரினங்களை வதைக்கும் செயற்பாடாகவும் கருதலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியை வேண்டி நிற்கும் கத்தோலிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பிலும் மற்றும் முஸ்லிம் மற்றும் வடக்கில் தமிழ் சமூகங்களினதும் ஆத்ம கௌரவத்தை இல்லாமலாக்கி அந்த சமூகப் பிரிவினரை செயலற்ற கீழ்ப்படிந்து செயற்படக் கூடிய பயந்தாங்கொள்ளி நிலைமைக்கு மாற்றும் வகையில் கைக்கொள்ளப்பட்ட பயங்கரமானதும் அவலட்சணமானதுமான வழிமுறைகள் சமூக அமைப்பில் உருவாகியுள்ள வீழ்ச்சிகளை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் சிரமமான அளவுக்கு மாற்றமடையச் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. மேற்குறித்த சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் மதப்பிரிவினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் அநியாயங்களுக்கு அழுத்தமான வகையில் எதிர்ப்பை வௌிக்காட்டும் வகையிலான செயற்பாடுகளை தென்னிலங்கையின் சிங்கள எதிர்க்கட்சிகளிடம் அறவே காண முடியவில்லை. அவ்வாறான செயற்பாடுகள் சிங்கள பௌத்தர்களின் அதிருப்தியை சம்பாதித்து விடும் என்று அந்தக் கட்சிகள் சிந்திப்பதன் காரணமாக அவை அவ்வாறு செயற்படுவதாக கருதலாம். அதன் காரணமாக குறித்த சமூகங்ககளுக்கு இடையிலான பிளவு மென்மேலும் அதிகரித்துச் செல்லக் காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் வடக்கின் தமிழ் மக்கள் தென்னிலங்கையின் எந்தவொரு கட்சியையும் நம்பத் தயாரில்லாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

வரலாற்றுச் சாபம்

இந்த நெருக்கடிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்திய நெருக்கடிகளாக கருத முடியாது. சுதந்திரத்தின் பின்னர் மற்றும் குறிப்பாக 1978 ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டதன் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் முன்னெடுத்துச் சென்ற அடக்குமுறை, நாசாகார மற்றும் கொள்ளைக்கார கொள்கைகள் காரணமாக உருவான குறிப்பிடத்தக்க நெருக்கடியாக கருதலாம். நெருக்கடியின் சூறாவளிக்குள் நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கையில் தான் கோட்டா ஜனாதிபதி பதவிக்கு வந்ததாக கருதலாம். நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்று நிலைமையும் அந்த நெருக்கடியை தீவிரப்படுத்த ஒரு காரணியாக அமைந்தது.

நன்றாக இருந்த நாடு அன்றி பாரிய அழிவை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் தான் அவர் அதிகாரத்துக்கு வந்தார். அவரது அனுபவமற்ற தன்மை, அறிவீனம், இனப்பாகுபாடான திமிர் மற்றும் அதிகார வெறியின் அடிப்படையிலான கொள்கைகள் என்பன இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு இருந்த ஆற்றலை இல்லாமலாக்கி நெருக்கடி சீக்கிரமாக வெடித்துச் சிதறும் நிலைமையை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது.

நவீன ஆட்சியாளர்கள் மத்தியில் காணப்பட வேண்டிய பண்புகளை முற்றாக புறம் தள்ளிச் செயற்படுதலே கோட்டாபயவின் ஆட்சியில் நான் காணும் மிக மோசமான பண்பாகும். அந்த வகையில் எமது முன்னைய சர்வாதிகார மன்னர்கள் கூட கோட்டாபயவை விட பண்பானவர்களாக காணப்பட்டுள்ளார்கள். முற்கால அரசர்கள் தங்கள் கடமைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு இயற்கையினால் அளிக்கப்படும் தண்டனை குறித்த விடயம் அவர்களின் முடிசூட்டு வைபவ பதவிப் பிரமாணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறித்து வில்ஹெம் கைகர் "மத்திய கால இலங்கை நாகரீகம்" என்ற நூலில் கீழ்க்கண்டவாறு விபரித்துள்ளார்.

"புதிய ஆட்சியாளர் ஒருவர் தனது உரிமைகள் மற்றும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் கொண்டாட்டமாகவும் மற்றும் விமர்சையாகவும் நடைபெற்ற வைபவம் ஒன்றின் வழியாக ஒழுங்கமைக்கப்பட்டது. அது முடிசூட்டு வைபவம் அல்லது அரசாட்சி ஆரம்ப வைபவமாக கருதப்பட்டது. கிரீடம் தரித்தல், மகுடம் சூட்டுதல் என்பனவும் அதற்கான வேறு பெயர்களாக இருந்தன.

"குறித்த வைபவம் அத்திமரப் பலகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட மண்டபமொன்றில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மகுடம் தரிக்கும் சத்திரியர் அந்த மரத்தின் பலகைகளினால் தயாரிக்கப்பட்ட சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார். முதலில் சத்திரிய குல கன்னிப் பெண் ஒருவர் கங்கை ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட நீரை வலம்புரிச் சங்கு ஒன்றில் நிரப்பி இரு கைககளாலும் அதனை ஏந்தி கீழ்க்கண்டவாறு கூறிக் கொண்டே அந்நீரை புதிய அரசரின் தலையில் தௌி்ப்பாள்: மன்னரே, இந்த முடிசூட்டு வைபவத்தின் மூலம் சகல உயர்குலத்தினரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் நிலைபேற்றுக்காக உங்களை மகுடாபிசேகம் செய்த அரசராக்கியுள்ளனர்.

 

நீதி மற்றும் அமைதி மூலமாகவும் துணிச்சலாக நீதியை நிலைநாட்டியும் அரசாட்சியை மேற்கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் பிள்ளைகள் குறித்தும் கரிசனம் கொண்டுள்ள உயர் குலத்தினர் தொடர்பில் அனுதாபம் கொண்டவராகவும் கருணையும் நல்லெண்ணம் கொண்டவராகவும் இருக்கக் கடவது.

அவர்கள் உங்களைப் போற்றிப் பாதுகாக்கக்கடவது. அதற்கடுத்ததாக அரசவையின் ஆலோசகர் -ராஜகுரு- உயர் ரக ஆடைகளினால் அலங்காரம் செய்து கொண்டு வௌ்ளிச் சங்கினால் மன்னரின் தலையில் நீர் தௌித்தபடி உயர்குலத்தவர் என்ற வசனத்துக்குப் பதிலாக பிராமண குலத்தவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அதே வார்த்தைகளை மன்றாடும் தொனியில் உச்சரிப்பார். அதன் பின்னர் மூத்த அமைச்சரும் தனது பதவிக்கான வஸ்திராபரணங்களை அணிந்தவராக தங்கச் சங்கு கொண்டு மன்னரின் தலையில் நீர் தௌித்து பிரபுக்கள் தொடர்பாக அதே மன்றாட்டத்தை மேற்கொள்வார். அதன் பின் கைகர் அவர்கள் மூவரும் மன்னரிடம் முன்வைக்கும் மன்றாட்டத்தின் கருத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

"விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அவர்கள் மூவரினதும் மன்றாட்டத்தில் சாபமொன்று உள்ளடங்கியுள்ளது. அது எவ்வகையான சாபம்?" எங்கள் அறிவுரைகளுக்கேற்ப அரசாட்சியை மேற்கொண்டால் சிறந்தது. ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாது போனால் உங்கள் தலை ஏழு துண்டங்களாக வெடித்துச் சிதறட்டும் என்பது அந்தச் சாபமாகும். (குறித்த புத்தகத்தின் 107ம் பந்தி)

அதனை எங்களது சிங்கள பௌத்த ஜனாதிபதிகளுக்கு இன்றும் கூட பொருத்தப்பாடானதாக ஏற்றுக் கொள்ள முடியும்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங் மூலம் இணையுங்கள்

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி