திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

Feature

இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்கள் தொகையைவிட அதிகமான தொலைபேசி (32.3 மில்லியன்) இணைப்புக்கள் இருப்பது வியப்பான ஒரு விடயமாக இருக்கிறது.

Feature

நாட்டில் ஜனாதிபதி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியாகும். எமது நாட்டின் முதல் பிரஜை ஜனாதிபதியாக இருப்பார். நிறைவேற்று ஜனாதிபதி பதவி தொடர்பில் இருக்கும் விமர்சனங்கள் ஒருபுறம் வைத்துவிட்டு பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் நிறைவேற்று ஜனாதிபதி என்பதனை சரியான முறையில் முதலீடு செய்தால் அதன் மூலமாக பல வேலைகளை செய்ய முடியும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

Feature

ஜனநாயக நாட்டில் உயர்ந்த நிறுவனமாக பாராளுமன்றம் உள்ளது. அவ்வாறு அல்லாது செல்லாக்காசாக மாறிய பாராளுமன்றம் அமைந்துள்ள நாடுகளும் உண்டு.அதற்கு காரணம் உரிய பாராளுமன்றம் தமக்குரித்தான பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமையாகும். எமது நாட்டின் பாராளுமன்றத்தையும் அதி உயர்ந்த சபை என குறிப்பிட்ட காலமும் உண்டு. அது அதிக காலத்திற்கு முன்னதாகும்.

இலங்கை எனும் கப்பலை செலுத்தும் கோட்டாபய எனப்படும் மீகாமன் கப்பல் போக்குவரத்து தொடர்பில் எதுவித அனுபவமுமற்ற புதியவர் என்று கருதலாம். அவர் அப்பதவியை அடையும் போது கப்பல் அமைதியான கடற்பிரதேசத்தில் அன்றி கப்பல்கள் பயணிக்காத கொந்தளிப்பான பிரதேசத்திற்கு தள்ளிச் செல்லப்பட்டிருந்த நிலையில் கப்பல் காணப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் பெண் வாக்காளர்களை மையமாக வைத்து வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் அரசியல் கட்சிகள், பெண் வேட்பாளர்களை களத்தில் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை. பலமான இரண்டு திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள், பெண்களின் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. அவை யதார்தத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில்லை என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை எதிர்க்கட்சியான தி.மு.கவும் ஆளும் அ.தி.மு.கவும் வெளியிட்டு வருகின்றன. அதிலும், தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதுதவிர, 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் 8,97,694 பேரும் உள்ளனர்.

மலையக முஸ்லிம் மக்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசாரணை அறிக்கையை வெளியிடத் தவறியுள்ளது.

ஆசியாவில் அழிந்து வரும் இனமாக இருக்கக்கூடிய பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பது என்பது இளைஞர்கள் இல்லை என்றால் நடக்காத ஒரு காரியமாக இருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி