இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்கள் தொகையைவிட அதிகமான தொலைபேசி (32.3 மில்லியன்) இணைப்புக்கள் இருப்பது வியப்பான ஒரு விடயமாக இருக்கிறது.

இதனால் இலங்கையில் உள்ள நான்கு தொலைத்தொடர்ப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தமது சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் பல சேவைகள், வாடிக்கையாளர்களை குழப்பும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் மிகச்சிறந்த அல்லது இலாபகரமான சேவையை வாடிக்கையாளர்கள் பெறவிரும்புகின்றனர்.

அண்மைக் காலமாக எயார்டெல் நிறுவனமும் போட்டித் தன்மையுடனான, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தமது சேவையை வழங்குகிறது. குறிப்பாக எயார்டெல் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Freedom Unlimited Plans வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

குரல் வழி அழைப்புக்களாகவும், இணைய வழி தொடர்பாடலாகவும் சிறந்த சேவையை எயார்டெல் நிறுவனம் வழங்குகிறது. குறிப்பாக 749 ரூபாவிற்கு வரையறையற்ற குரல் வழி அழைப்புக்களை எந்த வலையமைப்புக்கும் மேற்கொள்ள முடிகிறது. அத்துடன், சமூக வலைத்தளங்களை (யூரிப், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்ஆப்) வரையறையின்றி பயன்படுத்த முடிகிறது.

இலங்கை தொலைத்தொடர்புத் துறையில் எந்தவொரு நிறுவனமும் ஏனைய வலையமைப்புக்களுக்கு குரல் வழி அழைப்புக்களையும், சமூக வலைத்தளப்பயன்பாட்டிற்கு வரையறையற்ற டேட்டாக்களையும் வழங்குவதில்லை.

இந்த நிலையில், எயார்டெல் சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் கூட வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தி, சிறந்த சேவையை எயார்டெல் வழங்குவதை மதிப்பிட முடிகிறது.

ஊடகத்துறையில் பணியாற்றும்போது, எந்தவொரு நிறுவனத்தின் சேவைகளை அல்லது தயாரிப்புக்களை மிகைப்படுத்தும் வகையில் குறிப்பிட முடியாது. ஆனால், ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் எனது, பணிகளை செய்துகொள்ள எயார்டெல் வழங்கும் சேவை மிகவும் வசதிபடைத்ததாக இருக்கிறது.

எனது பணிக்காலத்தில் வேறு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்திய போதிலும், எயார்டெல் சேவை திருப்திதரும் வகையில் இருக்கிறது. இதற்கு கொடுக்கும் பணத்திற்கு முழுமையான பயனைப் பெற முடிவதுதான் சிறப்பம்சமாகும்.

பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் பல சேவைகளை அல்லது திட்டங்களை (குரல்வழி அழைப்பு மற்றும் டேட்டா) வழங்குகின்றன. இருந்தாலும் குழப்பமில்லாத, ஒளிவுமறைவு இல்லாத சேவையை எயார்டெல்லிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.

Airtel day 2

எயார்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தரமும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். குறிப்பாக நாம் ஒரு திட்ட சேவையைப் பெற்று பயன்படுத்தும் போது தரமும் முக்கியம் பெறுகிறது. குறிப்பாக, பயன்படுத்தும் நேரம், தெளிவு, தரம் ஆகியவை அந்த சேவையை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டியது அவசியமானது.

ஆனால், பணம் கொடுத்து பெறும் திட்ட சேவைகளுக்கு கட்டுப்பாடுகளும், வரையறைகளும், நாம் கொடுக்கும் பணத்திற்கான முழுமையான பயன்பாட்டை பெற முடியாமல் இருக்கிறது. ஆனால் இந்தக் குறையை தற்போது எயார்டெல் சேவை தீர்த்து வைத்துள்ளது.

எயார்டெல் முற்கொடுப்பனவுத் திட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எவ்வித மறைமுக கட்டணங்களும் அங்கு உள்ளடக்கப்படுவதில்லை. அத்துடன், பெறப்படும் டேட்டாக்களை எந்த நேரமும் பயன்படுத்தக்கூடிய வசதி இருக்கிறது.

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எயார்டெல் நிறுவனத்தின் சில திட்டங்கள் வாடிக்கையாளரின் பிரச்சினைகளுக்கும், குறைகளுக்கும் தீர்வாக அமைந்திருக்கிறது.

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் என அனைத்துத் தளங்களிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், எயார்டெல் நிறுவனம் வாடிக்கையாளரின் தேவையை அறிந்து தமது சேவையை வழங்குகிறது. 

எயார்டெல் நிறுவனம் வாடிக்கையாளரை முதன்மைப்படுத்தி, தமது சேவையை வழங்குவதால் பணம் கொடுத்து பெறும் சேவையை வாடிக்கையாளர்கள் முழுமையாக, விரும்பிய நேரத்தில் பயன்படுத்தும் வசதி திருப்திதரும் வகையில்  இருக்கிறது.

  • ஹரேந்திரன் கிருஸ்ணசாமி

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி