ஜனநாயக நாட்டில் உயர்ந்த நிறுவனமாக பாராளுமன்றம் உள்ளது. அவ்வாறு அல்லாது செல்லாக்காசாக மாறிய பாராளுமன்றம் அமைந்துள்ள நாடுகளும் உண்டு.அதற்கு காரணம் உரிய பாராளுமன்றம் தமக்குரித்தான பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமையாகும். எமது நாட்டின் பாராளுமன்றத்தையும் அதி உயர்ந்த சபை என குறிப்பிட்ட காலமும் உண்டு. அது அதிக காலத்திற்கு முன்னதாகும்.

எமது நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை சில்லரைக்காசுக்கும் கவனத்திற்கொள்வது கிடையாது. இப்பாராளுமன்றம் அதி உயர்ந்தது என கூறுவது பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் மட்டுமே. யாராவது கேட்டால் திஸ்ஸகுட்டி உள்ள பாராளுமன்றம் அதிஉயர்ந்த சபையாக எவ்வாறு அமைவது எனின். வாய்மொழி கிடையாது. உண்மையில் எமது நாட்டு மக்களில் அனேகர் கருதுவது பாராளுமன்றம் என்பது நாட்டில் உள்ள ஊழல் நிறைந்த நிறுவனங்களுள் ஒன்றாக.

இந்த நாட்டு மக்களிடம் கேட்டால் கள்வர்கள் இருப்பது எங்கே என்று பெரும்பான்மையானோர் கூறுவது சிறையில் அல்ல பாராளுமன்றத்தில் என. நாட்டுக்கு ஏதாவது ஒரு அனர்த்தம் ஏற்படின் அதாவது மண்சரிவு, வெள்ளம், சூறாவளி ஏற்பட்டால் மக்கள் கூறுவது அது பாராளுமன்றத்திற்கு வந்தால் சரி என்று. 225 பேரும் போக குண்டுவைத்தால்கூட பரவாயில்லை என்று குறிப்பிட்ட கதைகள் எத்தனையை நாம் கேட்டுள்ளோமே? அதற்கு சிறந்த உதாரணம்தான் தற்போது பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொற்றியுள்ள கொவிட் கொத்தணி ஆகும்.

மக்கள் கூறுவது அவரகளுக்கு கொரோனா ஏற்பட்டும் ஒருவரும் இறப்பதில்லை என. எதிரியை கூட இறக்க வேணாம் என பிரார்த்திக்கும் மக்கள் உள்ள இந்நாட்டில் தங்களது வாக்குகளால் பாராளுமன்றம் அனுப்பியவர்களை இறக்கவேண்டும் என்று பிரார்த்திப்பது ஏன்?

உண்மையில். அது ஆழமாக சிந்திக்கவேண்டிய விடயமாகும். எமது நாட்டில் பாராளுமன்றம் செல்வதென்பது 10 பரம்பரை உயர்நிலைக்கு செல்லும் விடயமாகும். அவ்வாறு மேல்வந்த ஒரு குடும்பம்தான் ராஜபக்ச குடும்பம். அண்ணன்கள், தம்பிமார்கள், தந்தைமார்கள், மகன்கள்.

அண்ணன்மாரது மகன்கள் , தங்கையின் மகன்கள் எல்லாம் நல்ல நிலையில். இன்னமும் குறைவாக இருப்பது பேரப்பிள்ளைகள், பேத்திகள் மட்டுமே. அவர்கள் இன்னமும் சிறிய குழந்தைகள். அதேபோல் அவ்வாறானமுறையில் பாராளுமன்றம் வருபவர்கள் எல்லாப்பக்கத்திலும் உள்ளது. பாராளுமன்றம் வந்தவுடன் முதலில் ஞாபகம் வருவது பேர்மிட்டாகும். அதன்பின் வரப்பிரசாதம். உண்மையில் எமது நாட்டில் பொதுச்சேவையை கெளரவமான சேவையாக கருதமுடியாது. அந்த வரப்பிரசாதங்களை கண்டவுடன். மக்கள் அதற்கு கெளரவம் செலுத்துவது பயத்திற்கே ஆகும்.

அவ்வாறல்லாது மனதில் உள்ள கெளரவத்திற்கல்ல. அடுத்ததாக தற்போது மக்களுக்கு பயமில்லை. எமது நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் பெரிய முதலாளியாவார். அதற்கு இன்றுள்ள பாராளுமன்றம் சிறந்த உதாரணமாகும். பாராளுமன்றத்தில் தலைவர் சபாநாயகர். இன்றுள்ள சபாநாயகர் என்பவர் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் உள்ள திறன் அற்ற சபாநாயகர்

அதனைவிட கீழ்த்தரமான ஒருவர் வந்தால் அது எதிர்காலத்தில்தான். சுயாதீனத்தன்மை,தனித்துவம்,தலைமைத்துவம் ஆகிய ஒன்றும் கிடையாது. அவர் உண்மையில் அரசாங்க தரப்பு சொல்லும் விடயங்களுக்கு தலையை சாய்க்க வைத்துள்ள ரோபோ போன்றுதான். அவர் சபாநாயகருக்குறிய வரப்பிரசாதங்கள் அனைத்தையும் தமது சகாக்களுக்கு பகிர்ந்து கொண்டு ரம்பொட அண்ணன் போல் அங்கு உள்ளார்.

1602 RateRalaFull

இப்பாராளுமன்றம் இவ்வாறான ஒரு கீழ்நிலைக்கு செல்ல இவர் பாரியளவில் காரணமானார். எமது நாட்டின் முன்னாள் சபாநாயகர்களுக்கு வெவ்வேறான விமர்சனங்கள் காணப்பட்டது. அவற்றுள் அதிகமானவை அரசியல் விமர்சனங்களாகும். அந்த அரசியல் விமர்சனமாயினும் தமது பதவியின் சுயாதீன தன்மை, தனித்தன்மை, கெளரவத்தை தக்க வைத்த சபாநாயகர்கள் எமது பாராளுமன்ற வரலாற்றில் இருந்துள்ளனர். ரட்டே ரால தெரிந்த வகையில் கடந்த நல்லாட்சியில் இருந்த கரு ஜயசூரிய சபாநாயகர் குறித்த பதவியை பொறுப்பேற்ற பின் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பீடமான சிறிகொத்தவிற்கு சென்றதே கிடையாது. சபாநாயகர் பதவியின் சுயாதீனம் மற்றும் கெளரவத்தை கரு அவ்வாறே பாதுகாத்தார்.

அன்று விமல் கருவிற்கு கூறியது கனவுக் குழந்தையின் அப்பப்பா என்று. இருப்பினும் இன்று விமலிற்கு என்ன தைரியம் இல்லையா சொல்லுவதற்கு. இந்த இடத்தில் இவ்வாறானதொரு பிரச்சினை வருகின்றது. உண்மையில் பாராளுமன்றத்தில் 225பேருக்கும் ஏசுவது நியாயமா என. தமது பாராளுமன்ற உறுப்பினர் வகிபாகத்தை நியாயமாக செய்கின்ற ஒருவராவது இல்லையா என நினைக்க தோன்றுகின்றது. குறித்த வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் அதேநேரம் அதற்கு நியாயத்தை செய்யாதுவிடின் உண்மையில் அவர்களுக்கு அடிக்கவேண்டும் கொட்டகைகளால்.

இருப்பினும் அதனை மதிப்பிடுவதாக இருந்தால் அதனை நியாயமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு அரசியலை திருப்புவது நல்லதல்ல. இந்த இடத்தில் கவனத்திற்கொள்வது அவர்களது அரசியல் சிந்தனையன்று. அவர் தமது பாராளுமன்ற வகிபாகத்திற்கு நியாயத்தை செய்கின்றாரா என்பது மட்டுமே. ரட்டே ரால இந்த ஆய்வுக்கு அரசியல் கருத்தை பயன்படுத்துவதில்லை. அந்த அர்த்தத்தில் அரசாங்க தரப்பை நோக்கின் அவ்வாறான ஒருவர் உள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. கடந்த தினங்களில் அரசாங்க கட்சி உறுப்பினர்கள் இரண்டு மூன்று பேரின் கதைகள் கேட்கக்கூடியதாக அமைந்தது. இருப்பினும் அது தாம் இருக்கும் இடத்திற்கேற்ப சொன்ன கதையாகும்.

தற்போது சுசில் கொஞ்சம் நன்றாக கதைக்கின்றார். இருப்பினும் அவர் தற்போது சங்கடத்தில் உள்ளார். அடுத்ததாக அரசாங்க தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நன்றாக முதலீடு செய்யக்கூடியவர்களும் அவ்வாறு செய்வார்களா என்ற கேள்வி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கும் குறித்த சந்தர்ப்பம் நன்றாக உள்ளது. இருப்பினும் மைத்ரி உரிய சந்தர்ப்பத்தை மக்களுக்காக பயன்படுத்துவதாக காணமுடியவில்லை. அடுத்தவர்கள் இருப்பது மேசைக்கு அடிப்பதற்கு, கத்துவதற்கு,கூக்குரலிட , அடிக்கவே.

எதிர்க்கட்சி பக்கம் எப்படி என்று நோக்கினால் அதற்கு மேலதிகமாக சிறிய மாற்றம் காணப்படுகின்றது. சில உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற வகிபாகத்தை செய்வதாக தெரிகின்றது. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் எப்போதும்போல் மக்கள் பிரச்சினைகளை கதைக்கின்றார். அரசியல் விமர்சனம் உள்ள

போதும் அவரது பாராளுமன்ற வகிபாகத்தை இணையாக பாராட்ட வேண்டும். அடுத்ததாக பாராளுமன்றத்தினுள் மக்கள் பிரதிநிதித்துவத்தை சிறப்பாக செய்வது அனுர திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று கூறினால் தவறில்லை.

அவர்கள் இருவரும் தெளிவாகவும் பிரச்சினைகளின்றி கருத்து தெரிவிக்கும் இருவர்கள். அதற்கடுத்து ஹர்ச டி சில்வா, சரத் பொன்சேக்கா போன்றோர்களும் உள்ளனர். இந்த இடத்தில் விசேடமாக நினைவுபடுத்த வேண்டிய நபர் ஒருவர் உள்ளார். அவர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ராசமாணிக்கம். உண்மையில் அவர் பாராளுமன்றத்தினுள் தமிழ் மக்களது உள்ளங்களை வென்றதுபோல் சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற உறுப்பினர் ஆவார். ராசமாணிக்கம் தமிழ் சிங்கள மக்களிடையே பாலத்தை ஏற்படுத்துவதற்கான நல்ல வளமாகும்.

ரட்டே ராலவும் ராசமாணிக்கத்தின் கதைகளை மிக விருப்போடு கேட்பார். அதற்கடுத்து ஹரீன், மனுச, சுமந்திரன் போன்றோரும் சிறந்த கருத்துக்களை பரிமாறுவார்கள். இருப்பினும் எப்போதுமல்ல. உண்மையில் இந்த இடத்தில் ரணில் குறித்து வசனமொன்றை குறிப்பிட வேண்டும். இன்று நாட்டில் உள்ள அரசியல் , பொருளாதார நிலைக்கேற்ப ரணில் தமது கருத்தை பயமின்றி சொல்பவர். ரணில் அதனை மிக வெளிப்படையாக சொல்கின்றார். அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துக்கள் காணப்படினும் குறித்த சிலர் தமது பாராளுமன்ற வகிபாகத்திற்கு ஏதோ ஒரு நியாயத்தை செய்கின்றனர்.

சொல்லப்படாத இன்னும் ஒன்று இரண்டு பேர் இருக்கலாம். பெண்கள் பக்கமாயின் ரோஹினி கவிரத்ன ஏதோ ஒன்றை செய்கின்றார் போல் காணமுடிகின்றது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சி என்றவகையில் அது போதாது. அரசாங்க பக்கம் என்றால் அதிகமானவர்கள் மெளனிகளாக வைத்துள்ளார்கள் என்பது விளங்குகின்றது. அடுத்ததாக எமது பாராளுமன்றத்தோடு தொடர்புபட்ட பாரிய பிரச்சினை அதுவல்ல.

அடுத்ததாக பாராளுமன்றம் எச்சந்தர்ப்பத்திலும் தம் பொறுப்பை நிறைவேற்றாமல் அடுத்தவர்களின் கையாளாக அமைவது. அதிகமான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின். அதனால் முழுமையாக அரசியல்யாப்புக்கு இழுக்கு நடைபெற்று முடிந்து விட்டது. எமது நாட்டில் நிதி அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்திற்கு, சட்டம் இயற்றும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு. அப்படியாயின் பாராளுமன்றத்தின் பொறுப்பாக அமைவது மக்களது பணம் குறித்து பொறுப்பை ஏற்பது, நாட்டின் அடிப்படை சட்டமான யாப்பு குறித்து பொறுப்பை ஏற்பது, இருப்பினும் இன்றைய பாராளுமன்றம் குறித்த இரண்டு அடிப்படை பொறுப்பையும் அலட்சியம் செய்துள்ளது. இன்று இப்பாராளுமன்றத்தில் அனேகர் இருக்கக்கூடியதாக இருப்பது ஒரு குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும் கூரைகளாக மாறிவிட்டனர் .

இன்று மக்கள் காணும் 20வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியவர்கள் இப்பாராளுமன்றமே. பெசிலின் மக்கள் எதிர்ப்பு வரவுசெலவுத்திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது இந்த பாராளுமன்றமே. இன்று அதனால்தான் பெசில் EPF,ETF நிதியத்தில் 25% அதிபொறுப்பை விதித்திருப்பது. அது நல்லாட்சியில் நடைபெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடியைவிட கூடிய கொள்ளையடிப்பாகும். இதனால் இப்பாராளுமன்றம் மக்களுக்கு சுமைகளை குவிக்கவும் ராஜபக்சக்களுக்கு உதவ செயற்படும் மக்கள் வெறுப்பு நிறுவனமாகும்.

அதனால் மக்கள் பாராளுமன்றத்திற்கு குரோதம் காட்டுகின்றனர். உண்மையில் இந்த பாராளுமன்றம் நாட்டுக்கு எதிரி. மக்கள் கருத்தை பின்தள்ளி ராஜபக்சக்களின் எதேச்சதிகார அரச அதிகாரத்தை பாதுகாக்கும் வழிமுறையாகும். தற்போது இப்பாராளுமன்றத்தை வெகுவிரைவாக கலைத்து புதிய பாராளுமன்றத்தை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும் மீளவும் இதேபோன்ற பாராளுமன்றத்தை ஏற்படுத்தி பலனில்லைபோல் ஏற்படுத்தவும் வேண்டாம். மக்களும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்.

இறைவன் துணை வெற்றி கிட்டட்டும்
இப்படிக்கு
ரட்டே ரால

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி