அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளரை தற்போதைக்கு அறிவிப்பதில்லை என்ற
இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை உரிய நேரத்தில் அறிவித்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இம்முறை ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாக மே தின பேரணிகளை நடத்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மே முதலாம் திகதி தனித்தனியாக பேரணிகளை நடத்த தீர்மானித்துள்ளன.
இதேவேளை, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வழமையை விட அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இலங்கையில் உள்ள அந்த நாடுகளின் தூதுவர்கள் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.