2025 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025
செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பப் பணியில் கலந்துகொண்ட போது, இது பற்றித் இதனைத் தெரிவித்தார்.
வீதி விபத்துக்களினால் அதிகளவான உயிர்கள் பலியாதாகவும், அந்த நிலையை தவிர்க்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நெடுஞ்சாலைகளில் ஓடும் இலகுரக வாகனங்களில் பின் இருக்கையில் அமரும் பயணிகளும சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலகுரக வாகனங்களுக்கு 2011ஆம் ஆண்டு முதல் சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், லொறிகள் மற்றும் பஸ்கள் சட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், இன்று முதல் பஸ் மற்றும் லொறி சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது சட்டத்தை அமுல்படுத்துவது மாத்திரம் அல்ல, விபத்துக்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை பேருந்துகளின் சாரதிகள் பாதுகாப்பு ஆசன பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாத சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் பி.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் ஒக்டோபர் 1, 2011 முதல் நடைமுறையில் உள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டம் அறிவிக்கப்பட்டாலும், பல வாகன ஓட்டிகள் பாதுகாப்பு சீட் பெல்ட் அணியாததால், வீதி விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.