leader eng

எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ பெரும்பான்மை கிடைக்காத 30 உள்ளூராட்சி மன்றங்களில் 23ஐ,

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பல எதிர்க்கட்சிகள் கூட்டு எதிரணியை உருவாக்கி இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி, இந்த வெற்றியைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று (17) வரை, இந்த நிறுவனங்களுக்கான மேயர் மற்றும் தலைவர்கள் தேர்வு உள்ளூராட்சி ஆணையர்கள் தலையீட்டில் நடந்தது.

பண்டாரவளை மாநகர சபை மற்றும் ஊவா பரணகம பிரதேச சபை போன்ற பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஏனைய கட்சிகள் கூட்டாக இணைந்து, அந்த உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்தன.

தம்புளை பிரதேச சபையின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தியிருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நியமித்ததால் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.

இதன் விளைவாக, ஐக்கிய மக்கள் சக்தியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்கள் கட்சி உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் அதிகாரம் பெற்ற உள்ளுராட்சி மன்றங்களாக கொழும்பு மாநகர சபை, குருநாகல் மாநகர சபை, ஹப்புத்தளை பிரதேச சபை, கேகாலை பிரதேச சபை, தெஹியோவிட்ட பிரதேச சபை, எம்பிலிபிட்டிய மாநகர சபை, எம்பிலிபிட்டிய பிரதேச சபை, பலாங்கொடை பிரதேச சபை, கலவான பிரதேச சபை, இரத்தினபுரி  பிரதேச சபை, மெததும்பர பிரதேச சபை, கல்பிட்டி பிரதேச சபை, புத்தளம் மாநகர சபை, மதவச்சி பிரதேச சபை, மீகஹகிவுல பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, கலேவெல பிரதேச சபை என்பன காணப்படுகின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி