“அரசாங்கம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கின் ஏனைய நாடுகள் செய்வது போல், இலங்கையிலும் கருத்து சுதந்திரம், அமைதியான கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவரின் அழைப்பை பல பிராதான கட்சிகள் நிராகரித்துள்ளன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும தெரிவித்துள்ளார்.

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சனிக்கிழமை தம்மைச் சந்தித்த போது அழைப்பு விடுத்தார்.

நாட்டில் உச்சம் கண்டுள்ள மக்கள் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது ராஜபக்ஷ அரசு  திணறி வரும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள்  இராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜபக்ஷ அரசுக்கு புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கப்பாடு அவசியம் - ஜெயசங்கர்எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரின் இணக்கப்பாடு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.


இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய படைகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி