கடந்த காலங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் தமக்கு முன்னைய ஜனாதிபதியை விடவும் ஊழல், வினைத்திறன் மற்றும் திறமையற்றவர்களாகவே இருந்ததாக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில்  இந்திய தூதகரம் வழங்கும் என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

 

'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த போராட்ட 3 மணியளவில் நான்கு வழிகளிலிருந்து வந்து ஹைட்பாக் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரும் வெள்ளை ஆடையணிந்து மெழுவர்த்தி ஏற்றி இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு டார்லி வீதி, விகாரமஹாதேவி பூங்கா, கொம்பனி தெரு மற்றும் பேப்ருக் பிளேஸ் ஆகிய நான்கு பகுதிகளிலும் இருந்து மக்கள் பேரணியாக வருகை தந்து ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.

மக்கள் பேரணி ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய பின்னர் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4.30 மணியளவில் சத்தியாக்கிரகம் ஆரம்பமாகி 5.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.

இந்த சத்தியாக்கிரகத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வர் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமைக்கு தற்போதைய அரங்கமே காரணம் என கண்டனம் வெளியிட்டும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோடு, தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ப்பதற்காக நீண்ட கால தேசிய கொள்கையொன்று எட்டப்பட வேண்டும் என்பதையும் , நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி; இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் இன்று (24) பசறை பிரதேச சபை முன்றலில் தலை மொட்டையடிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானம் மிகமுக்கிய நகர்வாகும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் வான்பரப்பை தற்போதைய அரசு இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக நேற்று (22) ஹப்புத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

பிரதமரைச் சந்திக்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயம் ஏமாற்று வேலை.

சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சர்வ கட்சி நாடு இன்று ஆரம்பமாகியது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.



இன்று மார்ச் 21ஆம் திகதி. சர்வகட்சி மாநாடு நடைபெற சரியாக இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. மைத்திரி குறிப்பிடுவது இந்த சந்தர்ப்பத்தில் நாடு எதிர்நோக்கி இருக்கக் கூடிய மிக கடுமையான நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் வருகை தந்து தங்களுடைய முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என்று. உண்மையில் மைத்திரி அந்த விடயத்தைக் குறிப்பிடுவது மிகவும் உணர்வு பூர்வமானதாக அமையலாம். இருப்பினும் முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியது ராஜபக்சக்கள் தானே .ரட்டே ரால மைத்திரியிடம் கேட்பது யார் இந்த ராஜபக்சக்களை நம்பிக்கை கொள்கிறார்கள்.


இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் அதிலும் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி