தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கைமைய அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகள் பல தாக்கம் செலுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ள இலங்கை எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட வேண்டும், மேலும் இது அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு தேசிய நலனாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி