இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவரின் அழைப்பை பல பிராதான கட்சிகள் நிராகரித்துள்ளன.


தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உள்ளிட்ட பல கட்சிகள் இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பை ஏற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகிய கட்சிகள் எந்தவொரு சர்வகட்சி, இடைக்கால அல்லது தேசிய அரசாங்கப் பொறிமுறைகளிலும் பங்குபற்றப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளது.

இன்று காலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் ஒப்பந்தம் செய்யவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என்று அறிவித்தார்.

அத்தோடு மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதோடு, தலைவர் அனுரகுமார திசாநாயக்க, பொதுமக்களின் அழைப்புகளுக்கு செவிசாய்த்து தனது ராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை விடுத்தார்.

அத்தோடு அமைச்சரவை அமைச்சர்கள் இராஜனாமா செய்ததையடுத்து புதிய நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் தொடர்ந்தும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் பதினான்கு (14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இந்தக் குழுவில் பதினான்கு (14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கான அவர்களின் அழைப்புகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்று கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, எனவே பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை  துறப்பதை தவறி மாற்று வழியின்றி தடுமாற்றம் கண்டுள்ளனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி