ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சனிக்கிழமை தம்மைச் சந்தித்த போது அழைப்பு விடுத்தார்.


அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவிகளை வகித்த வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்ததையடுத்து அவர்களின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டன.

அதன் பின்னர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருக்க நாணயக்காரவும் தீர்மானித்தார்.

தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய இணங்கபோவதில்லை என வீரவன்ச டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது மற்றவர்களுடன் தானும் இதனையே கூறியதாக அவர் கூறினார். முன்னதாக அரசங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக வீரவன்சவும், எரிசக்தி அமைச்சராக கம்மன்பிலவும் பதவி வகித்தனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி