அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை என  பிரதமர் ஊடகப்பிரிவு இன்று அறிவித்திருந்தது.இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை  என்றால் அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவுக்கு அமைய உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்படமாட்டாது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமைச்சுப் பதவிகளில்  இருந்து விலகுவதாக  நாமல் ராஜபக்ஸ அறிவித்திருந்ததோடு நீதி அமைச்சர் அலிசப்ரியும்,  பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடப்பெற்ற நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் தற்போது குடும்ப அரசியலுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். ஜனாதிபதியை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களை சமாதானப்படுத்தும் இந்த முடிவுகள் மக்களை சமாதானப்படுத்துமா என்பது சந்தேகமே!

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி