உலகெங்கின் ஏனைய நாடுகள் செய்வது போல், இலங்கையிலும் கருத்து சுதந்திரம், அமைதியான கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டதுடன், சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஹனா சிங்கர் ஹம்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

 ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமைகளாகும். அவை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் அதேவேளை, அவை பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.

 அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும், வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தமது செயற்பாட்டை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி