மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பாராளுமன்றமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்தக் குழுவின் ஊடாக தேசிய இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி