இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.

கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை  மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரு தினங்களில் இடம்பெறாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் உத்தரவுக்கு அமைய ஆப்கான் தொலைக்காட்சி சேவைகளில் உள்ள பெண் தொகுப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமது முகத்தை மறைத்தபடி தோன்றினர்.

அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

6 நாட்களுக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுமென லாப் காஸ் நிறுவனம்  நிறுவனம் (LAUGFS gas company) தெரிவித்துள்ளது.

இன்றைய தினமும்(26) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட உள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திரஜித் குமாரசுவாமி தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

''கொள்கை முடிவுகளில் பாரபட்சம் இல்லை'' - மத்திய வங்கி ஆளுநர்

இதேவேளைஇ இலங்கை மத்திய வங்கியின் நல்ல கொள்கை முடிவுகளுக்கு கட்சி பேதமின்றி ஆதரவு வழங்குமாறு அரசியல் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (24) பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கஇ நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு நேற்று அழைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி