பயணக் கட்டுப்பாடு 21ம் திகதி வரை நீடிப்பு! ஜெனரல் ஷவேந்திர சில்வா
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐ.நா. ஆதரவு பகுப்பாய்வு ஒன்று வெளியான பிறகு, வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா.மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.
திருக்கோவில், பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை - சாகமம் பகுதியில் பிரதேச செயலகத்தின் அனுமதியின்று நிர்மாணிக்கப்படும் கல்குவாரி (கல் உடைக்கும் தொழிற்சாலை) குறித்து கிராம மக்கள் கவலையையும், விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
கொரியாவில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தொழில் வாய்ப்பிற்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் நடைபெற்ற பேச்சு வெற்றியளிக்காத நிலையில், தாம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 14ம் திகதி வரை கிடைக்கும் கொவிட் தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணத்தடை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே கூறியுள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில், வேதிப் பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது - இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமை காரணமாக உள்ளூர் தொழில்துறை ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.இதை பிரதமருக்கு தெரிவிக்கும் ஊடக மாநாட்டில், உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ .5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.