வாக்கெடுப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் அதாவது இன்று மே மாதம்  3ஆம் திகதி நள்ளிரவு 12

மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 3 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை 4 ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 4 ஆம் திகதியன்று வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸுக்குக் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 43 வேட்பாளர்களும், 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 41 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி