லண்டன் உயர்நிலை தீர்ப்பாயம் ஒன்று வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றை அடுத்து ஆஸ்திரேலியா தனது அகதிகள் தஞ்சக் கோரிக்கை தொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார்.

தற்போதைய நெருக்கடியால் ஜனநாயகத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷர்களும், குறிப்பாக ஜனாதிபதியும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறார் என முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் காரணமாக மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை வழங்க தான் தயாரக இருப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் சுலாவேசி நகரில் கொடமொபாகு பகுதியில் இருந்து 224 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.39 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பானந்துரையிலிருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையிலான கடலோர மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மீன்பிடித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mahindarajapaksa.lk நேற்று (2) ஹெக்கர்களால் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது.உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

சுகாதாரத் துறையில் 20ற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு 'இன்குலாப்' என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் உரிமையை அதானி நிறுவனத்திடம் தாரைவார்க்க ராஜபக்ஷ அரசாங்கம் மே 3ம் திகதி திருட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறை போக்குகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சவால் விட்ட முன்னணி அறிஞர் பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் காலமானார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி